பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

63

அவரே முதன்மை வாய்ந்த வீரராய் இருக்க வேண்டும் என அவள் உறுதியாக நம்பினாள். தன்னிடம் விட்டுப்போன கேடயத்தை அவர் காதலுக்கு அறிகுறி என எண்ணி அதனை அவள் ஓயாது எடுப்பதும் துடைப்பதும் அதிலுள்ள மூன்று அரிமாக்களின் படத்தைப் பார்த்து அவரைப்பற்றி மனக்கோட்டைகள் கட்டுவதுமாயிருந்தாள். அக்கேடயம் அழுக்குப்படாமலிருக்க அவள் தன் சிறந்த பொன்னாடை ஒன்றைக் கொண்டே அதற்கு உறைசெய்து அதில் அவர் கேடயத்தின் படங்களைத் தீட்டிப் பூ வேலைகளைச் செய்து மினுக்கினாள். இங்ஙனம் நொடிகளையெல்லாம் ஊழிகளாகக் கழித்து நாள்கள் பல சென்றதால் அவள் மனத்துக்குள், ‘அவள் வெற்றியடைந்தாரா? ஏன் வரவில்லை? என்றெல்லாம் கவலை கொண்டாள்.

லான்ஸிலட்டோ என்று யாவரும் எண்ணும்படி வியக்கத்தக்க முறையில் புதிய வீரனைப் பாராட்டி ஆர்தர் அவருக்கு மணியை அளிக்க எண்ணி அவரை அழைத்துப் பார்த்தார்.புதியவீரர் மணியைப் புறக்கணித்துச் சென்றதும், அவர் உயிருக்கே மோசமான நிலையில் படுகாயமடைந்து கிடந்தார் என்று கேட்டதும் அவர் ஆர்வத்தைப் பின்னும் மிகைப்படுத்தின. உரிமைப்படி எப்படியும் மணியை வெற்றி பெற்றவருக்குக் கொடுத்தாக வேண்டும் என்றெண்ணிய ஆர்தர் தம் சிற்றப்பன் பிள்ளையாகிய கவெயினிடம்54 அதைக் கொடுத்து அவரைப் பாராட்டி வருமாறு அனுப்பினார்.

கவெயின் பல இடங்களிலும் சுற்றித் திரிந்து புதிய வீரரைக் காணாமல் ஓய்ந்து தற்செயலாக ஆஸ்டொலட் வந்தார். ஈலேயினும் ஆவலுடன் போட்டி விழாவின் முடிவென்ன என்று கேட்டாள். ஆளடையாளமற்ற புதிய வீரர் ஒருவர் வெற்றி பெற்றாரென்று கேட்டதே அவள் மகிழ்ச்சிப் பெருக்கால் தனக்கு அவர் மீதே காதலென்பதையும், அவர் கேடயம் தன்னிடமே இருந்தது என்பதையும் வெளியிட்டுக் கூறி அக்கேடயத்தையும் காட்டினாள். கவெயின் அதன் மூன்று அரிமாக்களைக் கண்டு, 'ஆ! நான் எண்ணியது சரி; இது லான்ஸிலட்டன்றி வேறன்று; என்றார். ஈலேயினும் நான் எண்ணியதும் சரி; என் தலைவர் ஆர்தர் மேடையில் முதன்மை வாய்ந்த வீரரே, என்றாள்.