பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

அப்பாத்துரையம் - 40

முறிப்பதைவிடக் கடுமையாக நடப்பதாலேயே எளிதில் முறித்தல்கூடும் என்று லான்ஸிலட் டிடம் அவள் தந்தை கூறினார். அதன்படி லான்ஸிலட் மற்றெல்லாரிடமும் விடைபெற்றுச் செல்லும்போது ஈலேயினிடம் மட்டும் சொல்லாமல் சென்றுவிட்டார். மேலும் அவர் கேடயத்துக்கு அவள் அரும்பாடு பட்டுத் தைத்த உறையை எறிந்து விட்டுக் கேடயத்தை மட்டுமே கொண்டுபோனார்.

லான்ஸிலட்டும் ஈலேயின் தந்தையும் நினைத்தபடி கடுமை யால் ஈலேயின் காதல் முறிவு பெறவில்லை. அவள் காதலுள்ளம் தான் முறிவுற்றது.ஆனையுண்ட விளங்கனிபோல் அவள் உடலும் உள்ளூர நோயுற்று, அஃது ஒரு வார காலத்திற்குள் காலன் அழைப்பைப் பெற்றது. இதற்கு முன் அவள் தந்தையிடம் தன் கடைசி விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டாள். அவள் தன் இறந்த உடலை வெண்பூக்களாலும் வெள்ளாடை அணி மணிகளாலும் அணி செய்வித்துப் பூம்படகொன்றில் வைத்துக் காமிலட்டுக்கு லான்ஸிலட்டிடம் அனுப்புமாறு அவர்களிடம் கோரினாள். அதோடு அவள் தன் காதல் வரலாற்றைத் தெரிவித்துத் திருமுகம் எழுதி அதனைத் தன் கையில் வைத்தனுப்ப ஏற்பாடு செய்தாள்.

காமிலட்டில் தம் வீரருடனும் லான்ஸிலட்டுடனும் அரசியுடனும் இருந்த ஆர்தர், கண்காண ஈலேயின் ஆற்றணங்கே பவனி வருவதுபோல் ஆற்றில் மிதந்து வந்தாள். அவள் கையிலிருந்து கடிதத்தை ஆர்தர் எல்லோருமறிய வாசிக்கச் செய்தார். அதன் மூலம் அவள் மூலம் அவள் காதலின் காதலின் ஆழமும் லான்ஸிலட்டின் புறக்கணிப்பும் கொடுமையும் யாவருக்கும் புலனாயிற்று. கினிவீயர் அரசியின் சினமும் மாறிற்று. ஆயினும், லான்ஸிலட் மனநிலை யாவர் சினத்திற்கும் வெறுப்புக்கும் அப்பாற் சென்றுவிட்டது. அவர் தம் வாழ்க்கையின் வெற்றிகளையும் பெருமைகளையும் எண்ணினார். ஒரு மாதின் கவலையால் மெலிந்த ஈலேயின் தன்னலத்தால் ஒப்பற்ற ஒரு நறுமலர் மலர்ச்சியடையாமல் வாடிப்போகும்படி நேர்ந்ததையும் எண்ணி எண்ணி மன மாழ்கினார். ஆர்தரின் வீரமிக்க உலகில் வெற்றிவீரர் என்று பேர்வாங்கிய அவர், அந்த உலகிலேயே ஏழேழ் நரகினுங் காணமுடியாத துன்பமெய்தி நடைப்பிணமாக வாழ்ந்தார்.