பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9. தெய்வீகத் திருக்கலம்

ஆர்தர் தம் ஆற்றலால் பிரிட்டனில் தம் அரசாட்சியை நிலைநிறுத்துவதுடன் அமையாது தெய்வ அருள்வழி நின்று அருளாட்சியும் நிறுவ எண்ணினார்.

இயசேபெருமானின் திரு அடியவருள் ஒருவரான அரிமாத்தியா யோஸப் என்பவன் இயேசுவின் திருக்குருதி யடங்கிய கலமொன்றைப் பிரிட்டனுக்குக்கொண்டு வந்திருந்தான். அஃது, அருளாளர்க்கன்றிப் பிறர்க்குக் காணவும் கிட்டாதது. தம் நற்செயலாலும் உள்ளத் தூய்மையாலும் தம் வீரர் அருள்

றைவாலும் இதனை அடையவேண்டும் என்று ஆர்தர் எண்ணினார். ஆனால், அவர் எவ்வளவோ தூய்மையுடையவ ராயினும் அவரைச் சார்ந்தோர் உள்ளத்தின் மாசு காரணமாக அதனை அவர் பெறக்கூடாதிருந்தது.

ஆர்தர் வாழ்வில் மாசு படரக் காரணமாயிருந்தவர்களுள் தலைமையானவர்கள் கினிவீயர் அரசியும் லான்ஸிலட்டும் ஆவர். அரசி உள்ளத்தில் கறை மிகுதி; ஆனால், லான்ஸிலட் உள்ள உயர்வுடையவர். அவள் பொய்மைக்காட்பட்டே அவர் கறைப்பட்டார். இந்நிலையில் அவரிடம் தூய காதல் கொண்ட ஒரு மாதின் மூலம் அவருக்குக் கலஹாட் என்ற ஒரு சிறுவன் தோன்றினான்.அரசியின் பொறாமைக்கஞ்சிய லான்ஸிலட், தாம் மறைவில் மணந்த அம் மாதையோ அதன் பயனாய்ப் பிறந்த புதல்வனையோ ஏற்கமுடியாதவராயிருந்தனர்.

ஆயினும், வீரத்திலும் நற்செயல்களிலும் ஈடுபட்டுக் கலஹாட் புகழ் ஓங்குந்தோறும் அவர் உள்ளூர மகிழ்ச்சி அடைந்தார். ஆர்தாராலும் அவர் வீரர் பலராலும் காணமுடியாத திருக்கலத்தை இவன் கண்டு அதன் ஒளியில் இரண்டறக் கலப்பான் என்று எதிர்கால நுனித்தறியும் அறிஞர் கூறக்கேட்டு, அவர் இன்னும் மகிழ்ச்சியடைந்தார். மெர்லின்