பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

அப்பாத்துரையம் – 40

அமைத்த ஆர்தர் வட்டமேடையைச் சுற்றியிருந்த நூறு இருக்கைகளில் தொண்ணூற்றென்பது நிறைவடைந்தும் இன்னும் ஒன்று நிறைவடையாமலே இருந்தது. அது பொன்னாலான இருக்கை. அதன்மீது மணிகள் அழுத்திய எழுத்துகளில், ‘மாசற்ற தூய அருள் வீரனே இதில் அமரலாம் என்று எழுதியருந்தது.

ஒருநாள் ஆர்தர் கொலுவிருக்கையில் திடுமெனக் கதவுகள் அடைத்துக்கொண்டன. அவ்வரையிருளில் ஒளிவீசும் வெண்பட்டாடை அணிந்த முதியோன் ஒருவன் பால்வழிந் தோடும் இளமுகமுடைய சிறுவனொருவனை உடன் கொண்டு வந்து, 'இவனே பிரிட்டனில் யாவரினும் தூய உள்ளமுடைய கன்னிவீரன். வட்டமேடைப் பொன்னிருக்கை இவனுக்கே உரியது', என்றான். அச்சிறுவனே கலஹாட் பெருந்தகை. அவ்விருக்கையிலும் அப்போது 'இது கலஹாட் பெருந்தகையின் ருக்கை' என்ற மணி எழுத்துகள் காணப்பட்டன.

அதேசமயம் வாள்பதித்த கல் ஒன்று ஆற்றில் மிதப்பதாக ஒருவன் வந்து கூறினான். அதன்மீது 'இதை உருவுபவன் திருக்கலத்தை அடைவதற் குரியவன்,' என்றெழுதப்பட்டிருந்தது. மனத்தில் கறையுடைய பலரும் சென்று தோல்வியுறவே அனைவரும் வியப்படைந்தனர். (அஃது அரசியின் பொய்ம்மையினால் அவருக்கு நேர்ந்த இழுக்கு என்பதனை அவர்கள் அறியார்) லான்ஸிலட்டோ தம்குற்றம் தாமறிந்தவராதலால் மறுத்துவிட்டார். கலஹாட் அனைவரும் காண அதனை எடுத்துக்கொண்டான்.

இதன்பின் திருக்கலம் ஒருநாள் அனைவர் கண்முன்னும் ரு கணம் கோடி ஞாயிறு திங்கள் தோன்றினாற் போன்ற ஒளிவீசிக் காட்சியளித்து மறைந்தது. அதன்மீது பட்டுத்துணி போர்த்திருந்தும் அஃது அவர்கள் கண்களைப் பறிக்கும் அழகுடையதாய் ஒளியும் மணமும் வீசியது. அதனைக் கண்டதே அனைவரும் அதனைச் சென்றடைய எண்ணிப் புறப்படலாயினர்.

ஆர்தருக்கு இம் முயற்சியில் ஆர்வமிகுதியாயினும் கவலையும் மிகுதியாயிற்று. வட்டமேடை வீரர் பலரும் இதனைக் காணத் தகுதியற்றவர்களாதலின் அவர்கள் மீள மாட்டார்கள். ஆதலால், அதன் இருக்கைகள் பல வெற்றிடமாய் விடுமே என்று