பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

69

அவர் வருந்தினார். கலஹாட் போன்ற சிலர் காணக்கூடும் என்று மகிழ்வும் கொண்டார்.

கலஹாட் முதலில் தம் வாளுக்கு இசைந்த கேடயத்தை நாடிச் சென்றார். உள்ளத்தூய்மையற்றவர் எடுத்தால் அவர்களை வீழ்த்தும் திறமுடைய கேடயமொன்று ஒரு மடத்திலிருப்பது கேட்டு அதனைக் காணச்சென்றார். அஃது அரிமாத்தியா ஜோஸப் இறக்கும்போது விட்டுச்சென்றது. அது தூய வெண்ணிறமுடையது. ஜோஸப் தம் குருதியால் அதில் சிவந்த சிலுவைக்குறியிட்டிருந்தார்.அதனை எடுத்துக்கொண்டு பலநாள் பயணம் செய்து பல நாடுகளுக்கும் சென்றார்.

கினிவீயரும் ஆர்தரும்

லான்ஸிலட் வழியில் ஒரு கோயிலின் பக்கத்தில் செல்லுகையில் பலகணி வழியாய் மூடப்பட்டிருந்த திருக் கிண்ணத்தைக் கண்டும் உள்ளே நுழைய முடியாது போனார். வெளியில் சோர்ந்து படுத்திருக்கையில் கனவில் மற்றுமொரு