பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

அப்பாத்துரையம் – 40

முறை அது தோற்றமளித்தது. ஆனால், அப்போதும் அதனை அணுக உடலில் ஆற்றலற்றுப் போயிற்று.

அங்கிருந்து ஒரு மரக்கலத்திலேறிச் செல்கையில், கலஹாட் பெருந்தகை வந்து அவரைக் கண்டார். சிலநாள் தந்தையும் மகனும் அளவளாவியிருந்தனர். பின் வெண்கவசம் அணிந்த வீரன் தன் குதிரையில் வரும்படி கலஹாட்டை மட்டும் அழைக்க, அவர் லான்ஸிலட்டிடம் பிரியா விடை பெற்றுச் சென்றார்.

வழியில் கலஹாட் பெர்ஸிவல் பலீஸ் என்ற இருவரையும் கண்டு உடனழைத்துக்கொண்டு முன் லான்ஸிலட் கனாக் கண்ட

மாகிய கர்போனெக் அரண்மனையை அடைந்தார். இவ்விடத்தில் முதியோன் ஒருவன் திருக்கலத்தை மூடியேந்திக் கொண்டுவந்து காட்சியளித்தான். பின் அவன் அவர்களிடம், “நீங்கள் அனைவரும் கப்பலேறி ஸாராஸ் நகரையடையுங்கள். அங்கு நீங்கள் அதனைத் திரையின்றி ஊனக் கண்ணால் காண்பீர்கள். மனிதர் அதனைக் கடைசியாகக் காண்பது அப்போதுதான். விரைவில் அது வானுலகம் சென்றுவிடும்" என்றனர்.

ஸாராஸ் நகரில் திருக்கலத்தைக் கலஹாட், கோயிலில் வெள்ளி மேடையில் வைத்து அதன் அருள்வலியால் நோய்களைப் போக்கி அறம்பெருக்கினன். ஆயினும், கொடுங்கோலனான அரசன் அவர்களைச் சிறையிட்டான். அவன் இறந்தபின் ஒருநாள் வானொலி ஒன்று கலஹாடி ன் தோழர்களை நோக்கி, 'திருக்கலம் வானுலகு செல்லும் நேரம் வந்துவிட்டது; நீங்கள் இனி உங்கள் இடம் செல்லுதல் தகுதி’ என்றது. அதனைத் திரையின்றிக் காணும் அளவு தூய்மை பெறாத அவர்களும் விடைகொண்டு போயினர்.

கலஹாட் திருக்கலத்தின் முன் மண்டியிட்டு வணங்கிய போது அதன்மீதிருந்த திரையகன்று அதன் தண் ஒளி அவன் உடலையும் உளத்தையும் குளிர்வித்து நிறைத்தது. வானவர் எதிர்கொண்டழைப்பத் திருக்கலத்துடன் அவன் ஆவி மேலெழுந்து விண்ணுலகு சென்றது.

லான்ஸிலட்டும், அதன்பின் பெர்ஸிவலும் பலிஸும் காமிலட் வந்து தாம் தாம் கண்ட அருங்காட்சிகளைக் கூறிக்