பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

71

கலஹாட்டுக்குக் கிடைத்த அரும்பெறற் பேற்றினைக் குறித்துப் புகழ்ந்தனர். அதுகேட்ட ஆர்தரும் மக்களும் மகிழ்ந்தனராயினும், மீண்டு வராத பலரையும், திருக்கலம் உலகினின்று மறைந்ததையும் எண்ணியபோது, கவலையின் மெல்லிய சாயல் அவர்கள் வாழ்வின் மீது படரலாயிற்று.