பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10. ஆர்தர் முடிவு

ஆர்தர் வாழ்வுக்கு மெர்லின் விதைவிதைத்தான்; அவன் வீழ்ச்சிக்குக் கினிவீயர் விதைவிதைத்தாள். அவ்விதை லான்ஸிலட்டால் முளைவிட்டு விவியனால் உரம் பெற்று வளர்ந்து மாட்ரெடால் அறுவடையாயிற்று.

மாட்ரெட்5 ஆர்தர் உடன்பிறந்தாளான பெல்லிஸென்ட் மகன். தம்நெருங்கிய உறவினனென்ற முறையில் ஆர்தர், அவனையே தமக்கடுத்த இளவரசனாக்க எண்ணினார். ஆனால், உரிமையுடன் அவர் அரசியற் செல்வத்தைப் பெறுவதற்கு மாறாக, அவரை அழித்துப்பெற எண்ணி அவனும் இறுதியில் அழிவுற்றான்.

பாற்கடலில் பிறந்த நஞ்சேபோல் ஆர்தர் குடியில் பிறந்த அவனிடம் கீழ்மையும் வஞ்சகமும் நன்றிகொன்ற தன்மையுமே மிகுந்திருந்தன. வஞ்சகன் யாரையும் வஞ்சமிழைப்பவர் என்று நினைப்பது இயற்கை. அதற்கேற்ப அவன் தன் தாய்தந்தையர் பேசும் மறைசொற்களைக் கூட ஒளிந்திருந்து கேட்கும் கயமையுடையவனாயிருந்தான். ஒரு நாள் கினிவீயர் அரசி தோழியர் சிலருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவன் மதிலேறிப் பதுங்கி அவர்கள் பேசுவதை உற்றுக்கேட்டான். அச் சமயம் அவ் வழியே வந்த லான்ஸிலட் அவனை வேறு யாரோ திருடன் என்றெண்ணிக் காலைப்பிடித்துக் கீழே மோதினர். அவன் அரசன் மகனென்று கண்டதும் வருந்தி, அவனிடம் மன்னிப்புக் கோரினார். மன்னிப்பு என்பதன் தன்மையையே அறியாத அக்கொடியோன் இதற்குப் பழிவாங்க எண்ணி அதற்காகக் காத்திருந்தான்.

Π

விரைவில் அவனுக்கு அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. ஆர்தரின் பரந்த பேரரசின் ஒரு கோடியில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அதனையடக்கச்சென்ற அவர், தம் இடத்திலிருந்து