பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

அப்பாத்துரையம் - 40

கிளர்ச்சிக்காரரை அடக்கிவிட்டுத் தம் நகரை நோக்கி மீண்டும் வந்துகொண்டிருந்த ஆர்தர் செவியிலும் இது படவே, அவர் காமிலட்டுக்கே வராமல் படை திரட்டி லான்ஸிலட்டின் குறுநிலக்கிழமைமீது படை எடுத்தார்.

லான்ஸிலட் தம் நிலக்கிழமை சென்றெட்டியதும் கிளர்ச்சி யெதுவும் இல்லை என்று கண்டார். ஆகவே, தமக்கு வந்த கடிதம் மாட்ரெட் சூழ்ச்சியால் அனுப்பிய கடிதம் என்பதை

அறிந்துகொண்டார். அதன்பின் கினிவீயர் தம்முடனேயே வந்ததாகப் பரவிய கதை கேட்டு அவர் பின்னும் புண்பட்டார். ஆயினும், அவள் உண்மையிருப்பிடத்தை அவர் கூறவும் துணியவில்லையாதலால், யாரும் அவரை நம்பவில்லை. ஆர்தர்கூட, கினிவீயரை அவர் தம் கோட்டையில் ஒளித்து வைத்தார் என்றே நினைத்துப் போரெழுச்சியில் முனைந்தார்.

லான்ஸிலட் ஊழ்வலியால் நெறிதவறினும் வன்னெஞ் சருமல்லர்; வஞ்சகமும் தீங்கும் உடையவருமல்லர். தம் தோழரும் தலைவரும் தம் பிழையால் வாழ்விழந்தவருமான ஆர்தரை எதுவரினும் எதிர்க்க அவர் மறுத்தார்."என் நாடும் என் உயிரும் தங்களைச் சார்ந்தவை. அதோடு தங்களுக்கு மாறாப் பிழையும் செய்தேன். தங்களை எதிர்த்து மீண்டும் பிழை செய்யேன். என் நாட்டையும் உயிரையும் தாங்கள் கொண்டால், என் தீராக் கடனில் ஒரு பகுதியே தீரும். அங்ஙனமே கொள்க" என்று அவர் ஆர்தருக்குச் சொல்லியனுப்பினார். எதிர்த்தோரை மட்டுமே திர்க்கும் தூய வீரராகிய ஆர்தருக்கு, எத்தகைய தீங்கு செய்தவராயினும் கழிவிரக்கமும் தன்மறுப்பும் மிக்க தம் பழைய தோழராகிய லான்ஸிலட்டை எதிர்க்க மனமில்லை. ஆனால், ஆர்தர் மருமகனாகிய கவெயின்58 ஆர்தர் சார்பின் நின்று லான்ஸிலட் செய்த பழி லான்ஸிலட்டை அழித்தாலன்றிப் போகாது என்று முரண்டினான். அதோடு நேரில் லான்ஸிலட் கோட்டை வாயிலில் சென்று அவரை மற்போருக்கும் அழைத்தான். லான்ஸிலட் “எது வரினும் என் தலைவரை எதிர்த்துப் போரிடேன்; அவர் உறவினரை எதிர்த்தும் போரிடேன்" என்றார். பார்ஸ், லயோனெல் முதலிய பிற வீரர்கள்சென்றெதிர்த்தனர். ஆனால், லான்ஸிலட் வந்தபோது புலியை எதிர்த்த ஆடுகள்போல் அவர்கள் வெருண்டோட