பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

77

முறைவர் முதலில் தன் வாழ்க்கைக் காவனவற்றைப் பார்த்துக் கொண்டு, பின் தன் மதிப்புக் காவனவற்றைக் கவனித்துக் கொண்டு அதன்பின்தான் நேர்மையைப் பற்றிச் சிந்திக்க முடியும்.

ஒரு பெரியார்.

வழக்குரைஞர் ஆவோர் தொடக்கத்தில் ஐந்து வெள்ளிக் காக 500 வெள்ளி அளவு உழைப்புச் செய்து, இறுதியில் 500 வெள்ளிக்காக ஐந்து வெள்ளி உழைப்பு உழைப்பவரே ஆவர். பெஞ்சமின் ப்ரூஸ்டர் கூற்று.

வழக்குரைஞர்கள் பெரும்பாலும் வழக்காடச் செல்வ தில்லை; இம் மறைபொருளை மக்கள் அறிந்திருந்தால் நல்லுது. மேஸக்கு ரோஸஸ்.

நம் பின்னோருக்காக நாம் ஏன் சட்டம் வகுக்க வேண்டும்? நமக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

ஸர் பாய்ல்ராஷ்.

இருபெண் மணத்துக்குரிய மிக்க கடுந் தண்டனை யாது? இரண்டு மாமியார் இருப்பதுதான்!

பாஸ்வெல்.

தண்டலாளர்: (கணவனைப் பார்த்து): இவ்வழக்கில் உன் மனைவிக்கு நீயே வழக்குரைஞராக இருக்க எண்ணமா?

கணவன்: அண்ணலே, நான் வழக்குரைஞனல்லன்; நான் உண்மை பேசப் பழகி விட்டவன்.

சமயப் பணியாளர்கள் வாய்மையிலேயே கருத்துச் செலுத்தவில்லையென்று புரூடு ஸ்காட்லாந்து நாட்டு ளைஞர்கட்கு அறிவுறுத்துகிறார்.

வரலாறு என்பது ஒரு பெரும் புளுகு மூட்டையென்று தூயதிரு. சமய அறிஞர் கிங்ஸ்லி கழறுகிறார்.

இந்த வசையுரைப் போராட்டத்தின் காரணம் என்ன?

இதனை விளக்குவது எளிது;