பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

79

வரலாறு என்பது மனித வகுப்பார் இதுவரை செய்துள்ள கொலை முதலிய குற்றங்கள், அவர்கள் அறியாமையால் நிகழ்ந்த பிழைகள், அவர்கட்கு நேர்ந்த இடையூறுகள் ஆகியவற்றின் தொகுதியே யல்லாது நேவறொன்றும் இல்லை.

கிப்ஸன்.

வரலாறு என்பது அறிஞர் பலர் சேர்ந்து ஒத்துப் புளுகும் புளுகன்றி வேறென்ன?

நெப்போலியன்.

வரலாற்றாசிரியனும் ஒரு தொலைநோக்கறிஞனே; ஆனால் ஒரே ஒரு வேற்றுமை; வரலாற்றாசிரியன் நோக்கு முன்நோக்கல்ல, பின் நோக்கு.

ஷலெருகல்.

நாம் விரும்பாதவற்றுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு நாம் விரும்புகிறவற்றுக்கு அடிமைப் பட்டிருக்க விரும்புவதே விடுதலை ஆகும்.

ஸர். எர்னஸ்ட் பெடன்.

காதலின் முதல் மூச்சே அறிவின் கடைசி மூச்சு.

அத்தாய்ன் ப்ரெட்.

வாழ்க்கை என்பது சோர்வு கொள்வதற்கான ஒரு நீள்

பயிற்சி.

ஸாமுவேல் பட்லர்.

வாழ்க்கையைப் பொறுத்துக் கொள்ளக் கூடும்; இந்தப்

பொழுதுபோக்கு வேடிக்கைகள் இல்லாவிட்டால்!

வாழ்க்கை ஒரு தீராத நோய்.

ஸர். எஸ். கார்ன்னவால்லூயி.

வாழ்விது ஓர்நிழலாட்டம்; பயிற்சியற்ற நடிகன் வந்தாடி ஓடித்தன் அரங்காட்ட மாடிப் பாழ்வெளியில் மறைகின்ற வறிதாட்டாம்; பொருளில் பருவரலும் பகட்டுமிக்க பயனீடாக் கதையின்

பண்பற்ற புனைசுருட்டுப் பொறியெனலாம் தகைத்தே.

ஏபிரசம் கௌலி.

ஷேக்ஸ்பியர்.