பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. அமைப்பாளரும் அமைப்புக்களும்

மனிதர் தனித்துநின்றும் செயலாற்றுலாம். அமைப்புக்கள் வாயிலாகவும் செயலாற்றலாம். அமைப்புக்கள் வாயிலாக நடைபெறும் செயல்களை அமைப்பின் செயல்கள் என்றே குறிப்பதுண்டு.அமைப்பவர் அல்லாமல் அமைப்புக்கே தனித்த நிலையும் செயலும் இருப்பதாகவும், அமைப்பே மனிதனை இயக்குவதாகவும் கூறப்படுவதுண்டு. அடிக்கடி மனித வகுப்பை இத்தகைய அமைப்புகுகள் ஆட்டிப்படைப்பதாகவும், அடக்கு முறை செய்வதாகவும் குறை கூறப்படுவதை இந்நாளில் நாம் கேட்கிறோம்.

66

புதுக்கிளர்ச்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர் வணிக அமைப்புமுறை,” “சமூக அமைப்புமுறை,” “போட்டி அமைப்பு முறை,” “அரசியல் அமைப்பு முறை" எனப் பல முறைகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். வறுமை, ஒழுக்கக்கேடு, பஞ்சம் ஆகியவற்றுக்கு இம்முறைகளே காரணம் என்றும் அவற்றின் மீது குறை கூறுகின்றனர்.

இவ்வமைப்புக்களைச் செயலுக்கு ஆட்பட்ட நிலைகள் என்று கொள்ளாமல், செயலாட்சியும் பொறுப்பும் உடையவை யாக இத்தகையோர் கருதுகின்றனர். அதுமட்டுமோ? மனித இனத்தின் உள்ளார்ந்த விருப்பங்களுக்கு மாறாக அவர்களைக் கட்டுப்படுத்தி அடக்கிக்கொடுமைப்படுத்துபவை என்றும், மனித எல்லை கடந்த மாபெரிய கொடுங்கோன்மையின் உருவங்கள் என்றும் இவ்வமைப்புக்களை அவர்கள் கற்பனை செய்கின்றனர்.

அமைப்பும் பொறுப்பும்

அமைப்புக்கள் தன்னியல்பான தனிநிலையோ, அவற்றைப்

தனி அறிவோ

உடையனவல்ல.

எனவே