பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மக்களும் அமைப்புகளும்

99

ஆகவே அவர்களைச் சுரண்டலுக்கு உதவுபவர்கள் என்று கூறுவது கூடப் போதாது. அவர்களே தான் சுரண்டலமைப்பு என்று கூறவேண்டும். குற்றஞ்சாட்டும் அவர்களே தான், உண்மையான குற்றவாளிகள்.

வாய்பேசாக் கூட்டுறவு

அமைப்பு முறைகள் என்பது என்ன? ஒன்றுபட்டுச் செயலாற்றுவதற்கு இணங்கியவர்களின் வாய்பேசாத கூட்டுறவு ஒப்பந்தங்களே அவை. அமைப்புமுறைகளின் தோற்றத்திற்கு மட்டுமன்றி அவற்றின் தெடர்ந்த வாழ்வுக்கும் இந்தக் கூட்டுறவு ஒருபுறமும் உயிர்நிலைக் காரணங்களாகும். எந்தத் தனிமனிதனும் இந்த இணக்கத்தைப் பின்வாங்கிக் கொள்ள முடியும். அதனால் கூட்டுறவு முறிந்துவிடா விட்டாலும், வலுக்குறைவது உறுதி. அதுமட்டுமன்று; ஒரு தனிமனிதன் செயலே மற்றத் தனிமனிதர் செயலையும் தூண்டாமலிராது. ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதனும் இத்தகைய கூட்டுறவில் சேர்ந்திருக்கும்போது, அதனால் பெறும் ஆதாயமும் உண்டு. இடர்களும் உண்டு; மொத்ததில் இடர்களைவிட ஆதாயம் மிகுதியென்று கருதுவதனாலேயே அதில் நீடித்து இருக்கிறான். அதே சமயம் கூட்டுறவிலிருந்து விலகுவதிலும் அவனுக்கு இடர்கள் இருக்கலாம். ஆதாயங்கள் இருக்கலாம். ஆதாயங்களைவிட இடர்களே அவனுக்குப் பெரிதாகத் தோற்றக்கூடும்.

ஒவ்வொரு மனிதனும் தன்தன் தனி நலனுக்காகவே போராடுகிறான். போராட்டத்தில் எந்தப்பக்கம் அவன் திரும்பினாலும் மொத்தத்தில் நலந்தீங்குகள் இருபுறமும் இருக்கத்தான் செய்யும். எந்தப் பக்கம் அவன் இருக்கிறான் என்பது அவன் அனுபவத்தையே பொறுத்தது. யாராவது கூட்டுறவின் பக்கம் இருப்பது நன்றன்று என்று கருதினால், அதன் இடர்களுடன் அதன் ஆதாயங்களையும் துறந்துவிட ஒருப்படுவர். அத்துடன் கூட்டுறவிலிருந்து விலகுவதனால் ஏற்படும் இடர்களை ஏற்று விலகுவதன் அனுபவத்தையும் வெற்றியையும் கண்ட கூட்டுறவின் மற்ற உறுப்பினரும் சிறிதுசிறிதாக அவரைப் பின்பற்றுவார்கள். பழைய அமைப்பு முறைகள் தாமாக இந்நிலையில் தளர்ந்து சரிந்து மறைந்து போகும்.