பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(100

அப்பாத்துரையம் - 41

கொடுமைகளை

தற்கால அமைப்பு முறைகளின் எடுத்துக்காட்டிக் கண்டிப்பவர் இத்தகைய நிலைமையை உண்டாக்கி வருகிறார்களென்று எவரும் கூறமுடியாது. அவர்கள் தாம் கண்டிக்கப்புகும் அமைப்பு முறையின் ஆதாயங்களைத் தாம் நுகரத் தயங்கவில்லை. வெறுப்பது ஆதாயங்களுடன் கிட்டும் இடர்களையே. அதுமட்டுமன்று. அவர்கள் பெறும் ஆதாயங்கள் பிறருக்கு இடரும், பிறர் பெறும் ஆதாயங்கள் அவர்களுக்கு இடரும் ஆகும். எனவே அவர்கள் விரும்புவது பிறர் இடரை, வெறுப்பது பிறர் ஆதாயத்தை என்பது தானே விளங்கும்.

சுருங்கச் சொன்னால், அவர்கள் சுரண்டலை வெறுப்பதற்கான காரணம், சுரண்டலை அவர்கள் ஒழிக்க விரும்பவதாலல்ல. சுரண்டலில் வரும் ஆதாயத்தில் அவர்கள் மற்றவர்களுக்குப் பங்குதர விரும்பவில்லை. அதில் வரும் டர்களிலோ, அவர்கள் தாம் பங்குகொள்ள விரும்பவில்லை. ஆதாயம் முழுவதும் கூடியமட்டும் தமக்கு வரவேண்டுமென்றும், இடர்கள் முழுவதும் கூடியமட்டும் மற்றவர்களுக்குச் செல்லவேண்டுமென்றும் அவர்கள் அவாவுகின்றனர்.

இது சுரண்டல் ண்டல் முறை எதிர்ப்பல்ல, சுரண்டலில் தனியுரிமைக் குத்தகை நாடுவதேயாகும்!

தனிமனிதரும் அமைப்பும்

“தனிமனிதன்” ஒன்றும் தெரியாத, ஒன்றும் தனிப்படச் செய்ய இயலமாட்டாத அப்பாவி. அவன் செய்யும் கொடுமைகள் கூட அவனாகச் செய்வதல்ல. இரக்கமற்ற, உணர்ச்சியற்ற ஓர் அமைப்பு முறையில் அவன் கட்டுண்டு. அதன் செயலில் அவன் சிக்குண்டு கிடக்கின்றான். கொடுமை செய்யும்போது அவன் கொடுமைக்கு ஆளானவனே யாவான்"

இதுவே போலி எதிர்ப்பாளர் கூற்று!

மேற்குறிப்பிட்ட செய்திகளை நோக்க, தனிமனிதனை எப்படி ஏதுமறியாத அப்பாவி என்று கூறமுடியும்? எல்லாரும் தத்தம் நலமே அவாவி ஈடுபட்டு ஒத்துழைக்கும் திட்டமுடைய அமைப்பில் அவர்கள் பொறுப்பு இல்லாதிருக்க முடியுமா? ஒவ்வொருவருக்கும் இல்லாத பொறுப்பு மொத்தத்தில்