பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மக்களும் அமைப்புகளும்

101

அமைப்புக்கு எவ்வாறு ஏற்பட முடியாது. ஏனெனில் தனிமனிதரை நீக்கி அமைப்பு என்ற ஒன்று இல்லை.

உண்மை யாதெனில், அமைப்பில் குறை இருந்தால், அப்போது அதில் ஈடுபடும் உறுப்பினர் அனைவருமே குற்றவாளிகள் ஆவர். அமைப்பு பல தலைமுறை, பல ஊ ஊழி கடந்ததா யிருந்தால் கூடப் பொறுப்பு குறையவில்லை. ஏனென்றால் தனிமனிதர் நலன்களுக்கு மாறான அமைப்பு நீடித்திருக்காது.

அமைப்புக்கான பொறுப்பைத் தனிமனிதரிடமிருந்து விலக்க முடியாது. ஆனால், இந்த அடிப்படை மெய்மையை மறுக்க, அமைப்பைக் குறைகூறுவதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்கள் வேறு ஒருவகையில் வாதிக்கூடும்.

66

“அமைப்புக்கான பொறுப்பில் தனிமனிதர் அனைவருக்கும் சரிசமமான பங்கு கிடையாது.ஏனென்றால், அதன் நலங்கள் தனி மனிதரிடையே ஒரு சிலருக்குச் சாதகமாகவும், மிகப் பலருக்குப் பாதகமாகவும் பலபடி உயர்வு தாழ்வுகளுடன் செயலாற்று கின்றன; அமைப்பின் நலத்துக்குரிய சிலரே அதனுடன் ஒத்துழைத்து அதில் பொறுப்புடையவராகின்றனர். மற்றவர் பொறுப்புடையவராகார். அத்துடன் சிலரிடையிலும் பலரிடையிலும் பலபடிகளாக நலங்களும் நலக்கேடுகளும் வேறுபடுகின்றன. எனவே ஒவ்வொருவரும் தமக்கு மேம்பட்ட வரை நோக்கி அமைப்பை எதிர்க்கவும், கீழ்ப்பட்டவரை நோக்கி அதை ஆதரிக்கவும் விரும்புபவர். இவ்விரண்டாகப் போக்கினால்தான், தனிமனிதன் செயல் பயனற்றதாகி, கூட்டு வலுவாகிய அமைப்பின் மொத்த வலிமை செயலாற்றுகிறது. எனவே, மக்கள் படிநலம் உயருந்தோறும் பொறுப்பு மிகுதி. தாழுந்தோறும் பொறுப்புக் குறைவு,” என்று அவர்கள் வாதிப்பர்.

ஒத்துழைப்பின் வலு

இந்த வாதமும் செல்லுபடியாகாது. முதலாவதாக, எந்த அமைப்பும்

மீது

சிறுபாலார் ஒத்துழைப்பின் நிலைபெறவோ, வளரவோ முடியாது. பெரும்பாலோர்களின் நலத்துக்கு அது மாறுபட்டதாயிருந்தால், அது கணக்கில்