பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

||–

அப்பாத்துரையம் - 41

அழிந்துவிடும். சிறுபாலார், பெரும்பாலார் என்ற வாதத்தை விடுத்துச் சுரண்டல் முறை அமைப்பைக் கண்டிப்பவர்கள் தனிமனிதன் இரண்டாகச் செயல்முறையைச் சுட்டிக்காட்டு கின்றனர். இதுவே நாம் கூறிய உண்மையை அவர்கள் உணர்கின்றனர் என்பதைக் காட்டும்.

தனிமனிதர் இரண்டகம் என்பது ஒவ்வொருவரும் தத்தம் நலம் நாடி அதை ஆதரித்தும், நலக்கேடு நாடி அதை எதிர்த்தும் நிற்கின்றனர் என்றே பொருள்படும். அவர்கள் எதிர்ப்பு ஆதரவைவிட வன்மையுடையதானால், அமைப்புத் தகர்ந்து விடும் என்பது கூறாதலே அமையும். அப்படியானால், அமைப்பு நீடிப்பதற்குக் காரணம் அவர்கள் எதிர்ப்பைவிட, ஆதரவே வலுவுடையது என்று ஏற்படுகிறது.

அவர்களில் பலர் சுரண்டலை முனைப்பாகக் கண்டிப்பவ ரல்லாராயினும், அவர்கள் நிலை உண்மையில் அதை ஆதரிப்பவர் நிலையில் வேறல்ல. குரல்கொடுத்துக் கண்டிக்கவோ,ஆதரிக்கவோ பிறரை தூண்டாவிடினும் அவர்கள் செயலிலேயே சுரண்டல் எதிர்பாளருடன் ஒத்துழைத்துச் சுரண்டல் இயந்திரத்தில் தம் ஆட்சியைக் கொண்டுவர முயல்கின்றனர். சுரண்டலைக் கண்டிப்பவரும் சரி, கண்டிக்காது வாய் பேசாது ஆதரிப்பவரும் சரி அம்முறைக்குப் பொறுப்பற்றவர் ஆகமாட்டார்கள் என்பது இதனால் தெற்றெனப்புலப்படுகின்றது.

சுரண்டலை வெளிப்படையாக ஆதரிப்பவர் எவரையும் நாம் காணமுடியாது. இது இயல்பானது, நீக்கமுடியாதது. தெய்வநீதிப்படி அமைந்தது என்று வேண்டுமானால் சிலர் கூறலாம். இவர்கள் சுரண்டல் அமைப்பு முறையில் நற்பலன் கண்டவர் அல்லது காண்கின்றவர் என்பது தெளிவு. ஆனால் மிகப்பெரும்பாலோர் ஆகியவரும் அதனை எதிர்க்கவில்லை. நற்பலன் கண்டவரைப் பின்பற்றி அதன் ஆட்சிக் கயிற்றைத் தம் கையில் கொள்ள அவர்கள் அரும்பாடுபடுகின்றனர். அவர்கள் அமைப்பு முறையில் மிகுதிநலம் பெறமுடியவில்லை. ஆயினும் அவர்கள் முயற்சி அம்முறையை முற்றிலும் நேரடியாக எதிர்ப்பதில்லை. அதனுடன் ஒத்துழைத்து அம்முறையில் வெற்றி கண்டவருடன் ஒப்பாக இடம் பெறவே அவர்கள் உழைக்கின்றனர்.