பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மக்களும் அமைப்புகளும்

103

மூன்றாவது பகுதி முதற்பகுதியைப் போலவே சிறுபான்மை யானது. இப்பகுதியினரே சுரண்டல் முறையை வெளிப்படையாக எதிர்க்க முனைந்து பிறரையும் எதிர்க்கத் தூண்டுபவர்கள். சொல்லளவில் அவர்கள் சுரண்டல் அமைப்புமுறையை எதிர்ப்பதாகத் தோன்றினாலும், செயலளவில் அவர்தம் இரண்டாம் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களைப் போல, அதன் நலங்களைங்க கூடியமட்டும் பற்றிக் கொண்டு பெரும்பங்கு நலங்களை அடைபவரை ஒத்த இடம்பெற அவாவி, அது காரணமாக அமைப்பை எதிர்ப்பவர்களே. அவர்களுக்கும் பெரும்பாலான மக்களுக்கும் உள்ள வேற்றுமை யாதெனில், அவர்கள் ஆட்சியிலுள்ளவத்களை எதிர்க்கும் துணிவுடைய வர்கள் என்பதே.

அமைப்புடன் ஒத்துழைத்து ஆட்சியிலுள்ளவர்களுக்கு ஓரளவு அடிமைப்பட்டுக் கிடக்கும் பெரும்பாலான பொதுமக்கள் ஆட்சியாளர்களை எதிர்க்கும்படி அவர்கள் தூண்டுகிறார்கள். இவ்வெதிர்ப்பு வெற்றி பெறுவது அருமை. ஆனால், வெற்றிபெற்ற அளவில் நலம்பெறுவது யார் என்று கவனித்தால், எதிர்ப்பின் பண்பு தெளிவாகப் புலப்படும். ஆட்சியாளர்களின் வலு எதிர்ப்பின் பண்பு தெளிவாகப் புலப்படும். ஆட்சியாளர்களின் வலு எதிர்ப்பால் சற்றுக் குறைபட்டால், அந்த அளவுக்கு வலுமிகுவது பொதுமக்களுக்கல்ல. அவர்களைத் தூண்டி ஆட்சியாளர்களை எதிர்த்தவர்களுக்கே. செயல்முறையில் இப்பயன் அவர்கள் நோக்கத்தின் புற உருவே.

அவர்கள் அமைப்பு முறையை எதிர்ப்பது அமைப்பு முறையை ஒழிப்பதற்கல்ல, அதன் ஆட்சியாளராகத் தாமே

அமர்வதற்காகத்தான்.

அமைப்பின் மூன்று வகுப்புகள்

இங்ஙனம் எந்த அமைப்பிலும் அந்த அமைப்பினால் ஆதாயம் பெறுபவர்கள், ஆதாயம் பெறும் அவாவுடன் கூடுமானமட்டும் ஒத்துழைப்பவர்கள், ஆதாயத்தைப் பையில் போட்டுக் கொண்டே எதிர்ப்பியக்கம் தோற்றுவித்து ஆதாயம் பெறுபவர் குழுவில் படிபடியாக இடம் பெறுபவர்கள் என்று மூன்று வகுப்பார் ஏற்படுகின்றனர். இவர்களை நாம் முதலாளி