பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

அப்பாத்துரையம் - 41

வகுப்பு, உழைப்பாளி வகுப்பு, நடுத்தர வகுப்பு என்று அழைக்கலாம். அமைபபினிடத் மூன்று வகுப்பும் சொல்லளவில் கொள்ளும் தொடர்பு வேறானாலும், அதன் ஆதாயத்தை மட்டும் பெற்று, அதை மேலும் பெருக்க நாடுவதில் நாடுவதில் மூன்று வகுப்புக்களுமே செயலில் ஒன்றுபடுதலைக் காணலாம்.

ஓர் அமைப்பை ஆதரிப்பவர்கள் அதன் நலன்களை மட்டுமின்றி அதன் கேடுகளையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஏனெனில் ஒரே அமைப்பில் ஒருவர் நலங்கள் மற்றொருவர் கேடுகளாகவும், ஒருவர் கேடுகள் மற்றொருவர் நலங்களாகவும்தான் இருக்க முடியும். நலங்கேடுகள் ஆகியவற்றில் ஒன்றைவிட்டு ஒன்றை எதிர்ப்பது, அமைப்பை எதிர்ப்பபதாக முடியாது; அமைப்பின் மற்ற உறுப்பினரை எதிர்ப்பதாகவே முடியும். இது போலவே அமைப்பை எதிர்ப்பவர்களும் அதன் கேடுகளை மட்டும் எதிர்த்தால் போதாது. அதன் நலங்களைத் துறந்தே அைைத எதிர்க்க வேண்டும்.

அவர்கள் நலங்கள் வேறுசிலர் கேடுகளே. அவர்கள் கேடுகளும் வேறுசிலர் நலங்களே. ஆதலால், அவர்கள் எதிர்ப்பு அச்சிலரைக் கெடுப்பதாகவே முடியும். சுரண்டலை முனைந்து எதிர்த்துத் தலைமை தாங்குபவர்கள் முனைந்து எதிர்க்காத பொதுமக்கள் நலங்களைச் சுரண்டுவது இவ்வகையில்தான்! முதலாளிகள் அல்லது ஆட்சியாளர்கள் பொது மக்களின் இயல்பான ஒத்துழைப்பைப் பயன்படுத்திச் சுரண்டுகிறார் களென்றால், இவ்வெதிர்ப்பாளர்கள் அவ்வெதிர்ப்பைத் தூண்டிவிட்டு அதன் பயனைச் சுரண்டுகிறார்களென்னலாம்.

அமைப்பில் பொதுமக்களே பெரும்பாலானவர்கள். ஆதலால், மற்ற இரண்டு வகுப்பாரும் அவர்களைச் சுரண்டு கிறார்கள் என்பது சொல்லளவில்தான் சரியாக முடியுமே யல்லாமல், உண்மையில், அதாவது செயலளவில் சரியல்ல. அவர்கள் ஒத்துழைப்பில்லாமல் எந்தக் சுரண்டலும் நடைபெற முடியாது.அதுமட்டுமன்று; பெரும்பாலான அவர்கள் பண்பே அதில் பெரும்பாலான பங்குப் பொறுப்புக்கும் உரியதாகும் என்பதில் ஐயமில்லை. எனவே, 'தனிமனிதன் குற்றமற்றவன்; அமைப்பே அவனைக் கைப்பாவை யாக்கி ஆட்டிப்படைத்து