பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் - 41

கல்வியின் தலையான நோக்கம் மக்களைச் சிந்திக்கத்

தூண்டுவதேயாகும்.

கிரேன்மர் பெருமகனார்

ஆசானுரைத்த தமைவரக் கொளினும்

காற் கூறல்லது பற்றலன் ஆகும்.

(நன்னூல்) - பவணந்திமுனிவர்

நம் தற்காலக் கல்வி முறையில் ஆசிரியர் போதனைக்கே நாம் மட்டு மீறிய முதன்மை கொடுத்து வருகிறோம். மாணவர் கற்றறிந்து கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை.

ஒரு பெரியார்

ஒருவன் கல்வியறிவின் மிகப் பெரும் பகுதி அவன் தன் முயற்சியால் தானே கற்றுக் கொள்வதாகும்.

ஸர் வாட்டர் காட்

பல்கலைக்கழகத்திலிருந்து (ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து) ஒருவன் பெறுவது வெறும் பட்டம் மட்டுமன்று (பட்டத் தகுதியே).

ஆர்தர் வாக்

ஒரு கல்வித்துறையின் பொது முடிபுகளை, நீ வீட்டி லிருந்தே ஏடுகள் மூலம் அறியலாம்; ஆனால் அதன் நுட்ப நுணுக்கங்கள், விளக்கங்கள், நயங்கள், அவற்றுக்கு உயிர் ஊட்டும் உயிர்ப் பண்புகள் ஆகியவற்றை அவற்றை உயிரியக்க மாக உடையவர் (பள்ளி ஆசிரியர்களிடமிருந்தே பெறக் கூடும். கார்டினல் நியூமன்

(கல்விபெற வேண்டும்) சிறுவனைக் கீழ்த்தர நூல்கள் எவையும் இல்லாத நூல்நிலையம் பார்த்து அதில் உலவவிட வேண்டும். அவன் விரும்பும் சுவடிகளை அவன் படித்து முன்னேறிக் கொள்வான்.

அறிஞர் ஜான்ஸன்

படிப்பு ஒரு மனிதனை நிறைவுடையவனாக்குகிறது; கேள்வி அவனை எதற்கும் சித்தமுடையவனாக்குகிறது; எழுதுதலே அவனுக்குத் திட்பம் தருகிறது.

ஃபிரான்சிஸ் பேக்கன்