பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

11

ஒரு குடியாட்சியின் உண்மையான அரண்வரிசை அதன் பள்ளிக் கூடங்களே யாகும்.

ஹோரேஸ் மான்.

6. கவிதை

பிற மாந்தரினும் கூரிய தொலை நோக்குடையவன்

கவிஞன்.

வேவல் பெருமகனார்

இன்னிசை ஓசை, மறைபொருள் செறிவு, மாய மருட்கை இம்மூன்றும் கவிதையின் உயிர்நிலைகள். இவற்றுடன் அது பொருளும் உடையது.

வேவல் பெருமகனார்

ஆழ்ந்த அறிவனாக இல்லாமல் எவரும் கவிஞருட் சிறந்த வனாக இருந்ததில்லை.

கவிஞர் காலரிட்ஜ்

உரைநடை, கவிதை ஆகியவை பற்றிய என் விளக்கத்தைக் கவிதை இளஞ் செல்வர்கள் கூர்ந்து கவனித்தல் வேண்டும். உரைநடை என்பது சொற்களின் மிகச் சிறந்த ஒழுங்கமைதி; கவிதை என்பது மிகச்சிறந்த சொற்களின் மிகச்சிறந்த ஒழுங்கமைதி.

கவிஞர் காலரிட்ஜ்

ஆர்ந்தமர்ந்து கருத்திலுருவாக்கப்பட்ட உணர்ச்சி வேகமே

கவிதை.

கவிஞர் வேர்ட்ஸ்வொர்த்

கவிதை என்பது இயற்கை யழகின் திரைநீக்கம்.

கவிஞர் ஷெல்லி

கவிதை என்பது யாது? புனைவாற்றல் குறிப்புரைகளால்

உருவாக்குகின்ற உயிர் உணர்ச்சிகளுக்கான உயர் சூழலே.

ரஸ்கின்