பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

15

பின்னணித் திரை; பகலவனொளியே அம் மேடையின் விளக்கங்கள்.

கார்லைல்

பெரியார் வாழ்வு எதுவும் வீணாவதில்லை. உலகின் வரலாறு பெரியார் வாழ்க்கை வரலாறுகளின் கோவையே.

கார்லைல்

வரலாறு என்றும் எதுவும் இரட்டுறச் செய்வதில்லை; வரலாற்றாசிரியர் செய்வர்.

ஒரு பெரியார்

எத்துணையோ அளவு வரலாறு வேண்டும், ஒரு சிறிதளவு இலக்கியம் உண்டாக.

ஹென்ரி ஜேம்ஸ்

வரலாற்றுச் சிக்கல்களை ஆராய்க; அன்மைக் காலப் பிரிவுகளையல்ல.

ஆக்டன் பெருமகனார்

மனித உலக வரலாறு என்பது மனிதர் கருதிய கருத்துக்களின் வரலாறேயாகும்.

(உலக வரலாற்றுச் சுருக்கம்) எச். ஜி. வெல்ஸ்.

9. கலையும் இயற்கையும்

கலைபயில் சீமாட்டி : இயற்கைக் காட்சியைக் கண் ணுற்றதும் எனக்கு என் கலை நினைவுக்கு வந்தது.

கருத்துரையாளர் : (இயற்கையைப் போற்றும் கலை எவ்வளவோ உண்டு) கலையைப் போற்றும் இயற்கையை எங்கும் கண்டதில்லை.

(ஒரு பத்திரிகை)

உயர் இசைபோலவே உயர்கலை ஒழுங்கமைதிக் கட்டுப் பாடற்றது. தன் அழகின்பத்தில் ஊறி அது வெறியுடையதாகும்.

ஜார்ஜ் ஜீன் நேதன்