பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

அப்பாத்துரையம் - 41

எந்தப் படத்தைப் பார்த்தாலும், “ஆ, அது என் மீது பற்றிக் கொண்டு விடுகிறது”, என்கிறாள் அச் சீமாட்டி. “அவை என்ன காளான்களா, பாசிகளா?" என்றார் குளோவிஸ்

ஸர்கி

கேலிச்சித்திரம் வரைவது என்பது கூடவே கூடாது. அவற்றை வரைந்து வரைந்து பழகி, நான் மனிதரின் இயற்கை முகம் எப்படி இருக்கும் என்பதை மறந்தே போனேன்.

கலைஞன் ஹோகார்த்

கலை என்பதே கலையின் முடிந்த முடிபன்று; மனிதர் உள்ளமளாவும் வகைகளுள் அது ஒன்று.

எம். பி. முஸ்ஸார்க்ஸ்கி

கலை வாழ்வின் உணவாகாது- வாழ்வின் இன்தேறல்

மட்டுமே.

ஜீன் பால்ரிஃட்டர்

கலைஞன் பொருள்களைக் காண்பது அவற்றின் இயல்பு

கொண்டன்று; தன் இயற்கை கொண்டு.

ஆல்ஃபிரட் டானெஸ்

10. சமயமும் மெய்விளக்கத் துறையும்

மனிதர் சமயத்துக்காக, அச்சமயத்தைப் பின்பற்றி வாழ்வது தவிர, வேறு எதுவும் செய்யத் தயங்க மாட்டார் அதற்காக வாதாடுவர், எழுதுவர், போராடுவர்!

கோல்ட்டன்

சமயமென ஒன்றிருந்தும் மக்கள் இவ்வளவு ஒழுக்கக் கேடுடையவர்களாயிருப்பார்களானால், சமயமில்லாது எந் நிலையில் இருப்பார்களோ?

ஃவிராங்க்லின்

சமயம் உண்மையில் ஒன்றே - அதுவே நல் வாழ்வு.

-

தாமஸ் ஃவுல்லா