பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

எத்தனை கடவுளர், எத்தனை சமயங்கள்

17

எத்தனை வளைநெளி புதுமைய நெறிகள்?

ஆனால் துன்பமிக்க இவ்வேழை உலகின் தேவை யெல்லாம் அன்புநெறி என்ற கலை ஒன்றுதான்.

எல்லா வீலர் வீல் சாக்ஸ்

என் நாடு இந்த உலகம்; மனித வகுப்பினர் என் குடும்பத்

தவர்; நன்மை செய்வதே என் சமயம்.

தாமஸ் பெய்ன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

புறநானூறு.

நானும் ஒரு காலத்தில் மெய்விளக்க அறிவராயிருக்க முயற்சி யெடுத்துக் கொண்டதுண்டு. ஆனால் இன்பம் வந்து அதை இடையிடையே கெடுத்துவிட்டது.

ஆலிவர் எட்வர்ட்ஸ்

II. மனிதன்

ஆ, மனிதன் எத்தகைய திறனமைந்த படைப்பு! எத்தனை அறிவாற்றல்! எத்தனை எல்லையில்லாக் கலைப் பண்பு! உருவில், இயக்கத்தில், செயலில் எத்தகைய மேதகைமை! உணர்வில் ஓர் இறையுரு வொப்பான்; உலகின் வனப்பெலாம் திரண்ட வடிவம்; உயிரினங்களின் ஒப்பற்ற கொடுமுடி!

மாவும் மாக்களும் ஐயறிவினவே

மக்கள் தாமே ஆறறி வுயிரே.

ஷேக்ஸ்பியர்

தொல்காப்பியர்

மனிதன் கற்பவற்றுள் உயர்ந்த கற்பனைக்குரிய பொருள்

மனிதனே.

மனிதன் தான் நம்பும் நம்பிக்கைகளின் ஒரு கூட்டு.

போப்

செக்காவ்