பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

அப்பாத்துரையம் - 41

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவ தெவன்.

திருவள்ளுவர்.

பலருக்கு வாழ்க்கை என்பது கிளர்ச்சிதரும் பல நிகழ்ச்சிகளின் தொடர்பாக மட்டுமே காணப்படுகிறது. ஆனால் வாழ்க்கை என்பது புறநிகழ்ச்சி எதுவுமன்று; அவற்றால் அகத்தே ஏற்படும் சிறு சிறு மாறுபாடுகளின் தொகுதியே என்பதனை அவர்கள் உணர்வதில்லை.

ஓர் அறிஞர்.

மாறுபாடற்ற ஒழுங்கமைதி என்பது சிறுமை உள்ளங்

களின் அறியாமையால் வரும் மாய மருட்சி.

எமர்ஸன்.

வாழ்க்கை என்பது ஓர் இசையரங்கேற்றம்; ஆனால் அதில் யாழ் வாசிப்பவன் மேடையில் அரங்கேற்றும் போதுதான், யாழ் மீட்டவும் பயிற்சி பெற்றுக் கொள்ள முனைகிறான்!

சாமுவேல் பட்லர்.

வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியற்ற வாழ்க்கை, வாழத் தகுந்த

தல்ல.

எழுத்தளவில்

அறிவராயிருப்பது

மிக

சாக்ரடீஸ்.

எளிதே;

வாழ்க்கையில் அறிவராயிருப்பது அத்துணை எளிதன்று.

செக்காவ்.

நாம் எவ்வளவு நாள் வாழ்வோம் என்பது முக்கியமன்று; எங்ஙனம் வாழ்கிறோம் என்பதே முக்கியமானது.

பெய்லி.

உணர்ச்சித் திறமுடையவர்கட்கு வாழ்க்கை ஒரு துயர் நாடகம். அறிவுறுத்திற முடையவர்க்கு அது ஒரு களி நாடகம்.

லாபுருயேர்.