பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

21

13. நாகரிகம்

பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பலர்.

திருவள்ளுவர்.

நாகரிகம் ஏழை மக்களுக்குச் செய்து தரும் வாழ்க்கை வசதியின் அளவே, அதன் உண்மையான உரைகல் ஆகும்.

டாக்டர் ஜான்ஸன்.

வரவர மிகுதியான நல்வாழ்வுச் சாதனங்கள், வரவர மிகுதி யான ஓய்வு நேரம் - இவையே நாகரிகத்தின் இரு அடிப்படைக் கூறுகள்.

பெஞ்ஜமின் டிஸ்ரேலி.

தங்கள் ஆன்ம வாழ்வை மேம்படுத்திக் கொள்பவர் களாலன்று நாகரிகம் சிறப்பது! தம் கடமைகளைச் சரிவரச் செய்பவர்களே, அவர்களினும் நாகரிக வாழ்வுக்கு உகந்தவர்கள் ஆவர்.

கென்னத் பிக்ட்ஹார்ன்.

தனி மனிதரைப் போலவே நாடுகளும் ஆட்சிகளும் தோன்றி மறைகின்றன. ஆனால் நாகரிகம் ஓர் இறவாப் பண்பு. மாஜினி.

தானே தன் காரியம் எதையும் செய்து கொள்ளாமல் கூடிய மட்டும் பிறரைக் கொண்டே செய்து வாழ்வதுதான் நாகரிகத்தின் தொடக்கம் ஆக அமைகிறது.

எச்.ஸி. பெய்லி.

நம் நாகரிகம் நம் உடலின் தோல்வரைகூடச் செல்வ தில்லை. அது பெரும்பாலும் நம் ஆடையுடன் நின்று விடுகிறது.

மிகு தூயதிரு டப்ள்யூ. ஆர். இங்க். டி.டி.