பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 41

14. பண்புடைமை

பண்புடையார் என்பவர் யார்? நன்றி கூறுவதில் முதல்வராக முந்திக் கொள்பவர், குறை கூறுவதில் கடைசியாகப் பிந்திக் கொள்பவர்!

பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர்

சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து

ஸெர்பிய நாட்டுப் பழஞ்சொல்.

யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்.

நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

(நீதிநெறி விளக்கம் : குமரகுருபரர்)

திருவள்ளுவர்.

தன்னையறியாமற்கூடப் பிறரைப் புண்படுத்தாதவனே

பண்புடையாளன்.

பிஸ்மார்க்.

பண்புடைமை என்பது இரு பண்புகளின் இணைப்பு. கோடாத நற்பொருளார்வச்சுவை ஒன்று; உலகெலாம் அணைத்தா தரிக்கும் தாராள மனப்பான்மை மற்றொன்று.

டப்ள்ளூ. எச். மாலர்.

என்னால் ஒரு பெருமகனை ஆக்க முடியும். ஆனால் எல்லாம்வல்ல இறைவனே ஒரு பண்புடையாளனை ஆக்க முடியும்.

முதலாம் ஜேம்ஸ் மன்னன்.

15. முன்னேற்றம்

முன்னேற்றமென்பது ஒரு குறிக்கோளன்று; ஒரு மறுக்க முடியா நடைமுறைத் தேவை. அது மனித வகுப்பின் ஒரு கடமை யன்று; இயற்கையின் ஓர் ஒழுங்கமைதி. இத்தகைய