பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

அப்பாத்துரையம் - 41

-

பித்தர்கள் இன்பமாகவே வாழ்கின்றனர் அமைந்த அறிவு டையவர் களைவிட அவர்கள் இன்பம் எத்தனையோ பெரிது!

அறிஞர் பால் மண்டேன்.

உலகத்தின் ஒவ்வொரு படி முன்னேற்றமும் ஒரு கழு மேடையிலிருந்து மறு கழு மேடைக்கும் ; ஒருபுதுக் கருத்துக்குப் போராடு வதிலிருந்து மறு புதுக் கருத்துக்குப் போராடும் வகையிலேயும் அமைந்துள்ளது.

வென்டெல் ஃவிலிப்ஸ்.

பல்வேறுபட்ட மக்களும் ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது பற்றிய கதையே உலக வரலாறு; யாரேனும் அறிவுத் திறமுடையவர் ஒரு புதுத் தவறு கண்டுபிடித்து, அதன் மூலம் வழக்கத்திற்கு மாறான சறுக்கல் ஏற்படுவதையே முன்னேற்றம் என்கிறோம்.

ஓர் அறிஞர்.

ஒரு தொல்லையே விட்டுக் கொடுத்து, மற்றொரு தொல் லையை வாங்குவதையே நாம் முன்னேற்றம் என்கிறோம்.

ஹாவ்லக் எல்லிஸ்.

16. நாடு

வேறு எந்த நாட்டிலிருந்தாயினும் இருவர் ஓரறைக்குள் நுழைந்து அமர நேர்ந்தால், உடன் தானே ஏதாவது உரையாடத் தொடங்காமலிருக்க மாட்டார்கள். ஆனால் அதே நிலையில் இரண்டு ஆங்கிலேயர்களின் விடப்பட்டால், ஒவ்வொரு வரும் கூடியமட்டும் தொலைவாக வேறு வேறு திசை நோக்கிய பலகணி யண்டை சென்று வாளா வெளியே பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அறிஞர் ஜான்ஸன்.

ஒரு காரியம் எவ்வளவு நல்லதாயினும் சரி, எவ்வளவு கெட்டதாயினும் சரி, அதைச் செய்யும் ஓர் ஆங்கிலேயனைக் காண்பதரிதன்று; ஆனால் 'தவறு' எதனையும் எவனும்