பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

||-

அப்பாத்துரையம் - 41

என்றால், பெரும்பாலோரும் தம்தம் பங்கை மனம் நிறைந்து ஏற்றுச் செல்லத் தயங்க மாட்டார்கள்.

20. செய்தித்தாள்

சாக்ரட்டிஸ்.

மூன்று செய்தியிதழ்களின் எதிர்ப்புக்கு நான் நடுங்குகிறேன்; ஆனால் ஒரு நூறாயிரம் துப்பாக்கிகள் ஏந்திய படைவீரருக்கு நான் நடுங்குவதில்லை.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.

நெப்போலியன்.

திருவள்ளுவர்.

செய்தியிதழ் விடுதலையுரிமை ஒரு குடியாட்சி வாழ்வின் ஊன்றுகோல் ஆகும்.

வெண்டெல் எல். வில்கி.

நம் விடுதலை, செய்தியிதழின் விடுதலையுரிமையைப் பொறுத்தது – அதைக் கட்டுப்படுத்தினால் நம் விடுதலை அழியா மலிருக்க முடியாது.

ஜெஃவ்வெர்ஸன்.

பொதுமக்களின் நினைவாற்றல் பத்தாண்டுகள் நீடித் திருக்கு மானால், எந்த அமைச்சரும் இரண்டு தடவை பணித்துறைக்கு வர முடியாது. அது பத்து வாரம் நீடிக்க முடியுமானால் செய்திகளின் வாய்மை, கருத்துக்களின் பொருத்த அமைதி ஆகியவற்றில் கருத்துடையவர்களால் எத்தனை செய்தியிதழ்கள் ஏற்கப்பட முடியும்?

போர்ட்ஸ்மத் கோமகன்.

21. சட்டமுறையும் வரையறையும்

சட்ட ஒழுங்கு ஓய்வுற்ற இடமே கொடுங்கோன்மை தொடங்குமிடம்.

(வில்லியம் பிட் சாதம் கொமான்.