பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

அப்பாத்துரையம் - 41

சட்டங்களை ஆக்குவதினும் அவற்றை நிறைவேற்றிச்

செயற்படுத்துவதே முதன்மை வாய்ந்தது.

ஜெஃப்பெர்ஸன்.

சட்டங்கள் சில சமயம் தூங்கக்கூடும். ஒரு போதும்

இறப்பதில்லை.

சட்டக் கருத்துரை.

சிறுமையுடைய சட்டங்கள் பெரும்படியான குற்றங்களை

ஆக்குவன.

ஊயீடா.

நல்லார் சட்டங்களுக்கு அஞ்ச வேண்டுவதில்லை. தீயோரை அடக்கவும், அவர்களைக் காக்கவுமே அது அமைந்துள்ளது.

மாஸிங்கர்.

நாட்டில் சட்டங்கள் பெருகுவது, மருத்துவர் பெருகுவது போன்றது. அது நற்குறியன்று.

வால்ட்டேர்.

சட்டங்கள் ஏழைகைள வருத்தும்; செல்வர்களைத் தீண்டாது- அவற்றை இயக்குபவர் அவர்கள்.

22. வகுப்பும் வகுப்புணர்ச்சியும்

கோல்டுஸ்மித்.

ஒரு வகுப்பினர் உலகத்தை இருபெரு வகுப்பாக வகுப்பவர்கள்; மற்ற வகுப்பினர் அங்ஙனம் வகுக்காதவர்கள். நான் (இரு வகுப்பாக வகுப்பவனாயினும்) பிந்திய வகுப்பையே விரும்புகிறேன்.

பஞ்ச் பத்திரிகை.

உலகம் இருசார்பாளர் அடங்கியது; ஒரு சார்பினர் செயல் செய்வோர்; மற்றையோர் செயலின் பயன் அடைவோர். எப்போதும் முதல் வகுப்பிலேயே சேர்ந்திருக்கப்பார். ஏனெனில் அதில்தான் போட்டி மிகக் குறைவு!

டுவைட் மாரோ.