பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம் - 41

கூடாதென்று பேசிய பழைய கதையில் வரும் படித்த முட்டாள் கூற்றையே இது நினைவூட்ட வல்லது.

மக்காலே.

நமக்கு நலமெனத் தோன்றுவதை நாம் விரும்பும் முறையிலேயே நம்மைச் செய்யவிடும் உரிமை தருவதே விடுதலை. அதே உரிமையை நாம் பிறருக்கு மறுக்காமலும், அவர்கள் அதைப் பெறுவதை மறுக்காமலும் இருக்கும்வரை அது உண்மையான விடுதலை ஆகும்.

ஜான் ஸ்டூவர்ட் மில்.

வெறும் அரசியல் விடுதலை எவ்வளவு இருந்தாலும் ஏழ்மையும் பசியும் உடைய மக்களுக்கு அதனால் மன நிறைவு ஏற்படாது.

மார்ஷல் லெனின்

வெல்வெட்டுப் பட்டு மெத்தையில் பிறருடன் இடர்ப் பட்டு அமர்வதினும், எனக்கெனத் தனி உரிமையுடைய ஒரு பூசணிக்காய் மீது உட்காருவதையே நான் பெரிதும் விரும்புவேன்.

தோரோ.

தனி மனிதன் உடலுக்கு உடல்நலம் எப்படியோ, அப்படியே நாட்டு நலனுக்கு உகந்தது விடுதலை. உடல் நலமின்றி மனிதனால் ன்பங்களை நுகர நுகர முடியாது; விடுதலையின்றி நாட்டு மக்களும் ன்ப வாழ்வினைப் பெறமுடியாது.

பாலிங்புரோக்.

விடுதலையே, ஆம், விடுதலையே வேண்டுவது என் சிறை ஒரு பொன்னுலகாயிருந்தால் கூட, அதன் பொன்மதிலைத் தாவிக் கடப்பதற்கே நான் துடிதுடிப்பேன்.

டிரைடன்.

வேறு எந்த விடுதலையும் எனக்கு வேண்டாம். அறிவை அறிய, ஆராய, நம்புவதை நம்ப, அகச்சான்றுக்கேற்ப இவற்றைக் கூற, இவற்றுக்கான விடுதலையே எனக்கு வேண்டும்.

மில்ட்டன்.