பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

|-

அப்பாத்துரையம் - 41

ஒரு நாட்டு வாழ்வின் போக்கு அடிக்கடி அதன் முதல மைச்சரின் உணவுச் செரிமானம் சரியாயிருக்கிறதா, அல்லதா என்பதையே பொறுத்ததாயிருக்கிறது!

வால்ட்டேர்.

உடல்நலம் உடல் நிலையைச் சார்ந்ததன்று,

மன

நிலையைச் சார்ந்தது.

மேரி பேக்கர் எடி.

தன்னுடன் விருந்துண்ண விருந்துண்ணத்

தூண்டும்படி அவன்

தன் விருந்துணவு வகைகளின் பட்டியலை என்னிடம் காட்டினான். நான் அதனை ஒருபுறம் ஒதுக்கி வைத்து, "உம் உண்டிப் பட்டியல் எனக்குத் தேவையில்லை. உடனுண் போர் பட்டியலைப் பார்த்துத்தான் நான் வர இணங்கக்கூடும்”, என்றேன்.

ஸ்விஃப்ட்.

நடிகர் எட்மண்ட்கீன் தம் நடிப்புக்கேற்ற உணவே உண்டு நடிப்பாராம். கொடுங்கோலனாக நடிக்குமுன் பன்றிக்கறியும், கொலையாளியாக நடிப்பதற்கு முன் பச்சை மாட்டுக் கறியும், காதலனாக நடிப்பதற்கு முன் பதம் செய்த ஆட்டுக் கறியும் உண்பாராம்!

ஸிட்னி ஸ்மித்.

உன் மன நிறைவுக்காக உண்; பிறர் மன நிறைவுக்காக உடு. ஃவிராங்க்லின்.

ஆரணங்குகளல்ல ஆடைகளை அணிவது; ஆடைகளே

ஆரணங்குகளை அணிந்து கொள்கின்றன.

எச்.எல்மெங் கென்.

பெண்டிர் தூக்குமேடைக்குச் செல்ல நேர்ந்தால், அப்போது கூட ஆடை சிங்காரித்துக்கொண்டு தூக்கு மேடை செல்வதற்காகச் சிறிது நேர ஓய்வு கேட்பர்.

கிராம்ஃவோர்ட்.