பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 41

நகை, நகைத்திறம் பற்றி ஒருவன் ஒரு நூல் எழுத முனைவ தானால், அதனை ஒரு இலக்கிய நோயின் முன்னறி விப்பு என்றே கருதலாம். ஏனெனில் இம் முயற்சியே அதன் ஆசிரியரிடம் அவ்விரு திறங்களும் இல்லை என்பதற்கான அறிகுறி ஆகும்.

பெர்னார்டு ஷா.

ஒருவன் தன் நேரத்தின் ஒரு பகுதியை நகையாடுபவர் களுடன் கழித்தல் நலம்.

டாக்டர் ஜான்ஸன்.

நகைப்புத் திறம் மனிதனுக்கு மட்டுமே இருப்பது ஏன் என்பது எனக்கு நன்கு விளங்குகிறது - கடுந் துயருக்கு அவனே மிகுதி ஆளாவதால், நகைப்புத் திறனை அவன் கண்டுபிடிக்க வேண்டிய தாயிற்று. உயிரினங்களில் துயர் மிகுதியும் அவலமும் உடைய அவனே, மிகுதியான மகிழ்ச்சிக்கும் உரியவனாயிருப்பது பொருத்த மானதே.

நீட்ஷ்.

முறுவலித்தற்குரிய நேரம் வேறு; நகைத்தற்குரிய நேரம் வேறு. ஆனால் நகைப்புறத்திறத்தை நாம் மறந்து வருவதுடன் பல்லிளித் தலையே முறுவலிப்பாகக் கொண்டும் வருகிறோம் என்பது வருந்தத்தக்கது.

எச். கெம்பால் கூக்.

தன்னிடமில்லாத பண்புகளுக்கு ஓர் இழப்பீடாகவே மனித னுக்குப் புனைவாற்றல் தரப்பட்டுள்ளது. அக்குறை பாடுபற்றி அவனுக்கு ஆறுதல் அளிக்கவே நகைத்திறம் தரப்பட்டுள்ளது.

ஓர் அறிஞர்.

கீழ் மக்கள் எப்போதும் சிரிப்பர். முறுவலித்தல் செய்யார்; பண்பிற் பயின்ற உயர்வுடையோர் புன்முறுவல் பூத்தவராகவே இருப்பர். அவர்கள் சிரித்தல் அருமை.

செஸ்ட்டர்ஃபீல்டுப் பெருமகனார்.

வாழ்க்கைப் புயலில் நகைத்திறம் ஓர் அரிய தற்காப்பிடம் ஆகும். கூருணர்ச்சியுடைய ஒருவன் நகைத்திற மற்றவனாயிருந்