பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

45

தால், அவ்வுணர்ச்சிகளால் அவனடையும் துன்பம் மிகவும் பெரிது.

அறிஞர் பெர்னார்டு ஹார்ட்.

வசைத்திறம் வாய்ந்த கூரிய நகைத்திறம், கூர்மை மிக்க கத்தியைப் போன்றது. ஆனால் கூர்மை மிக்க கத்தியைப் போலவே அது தன்னைப் பயன்படுத்துவாரையும் வெட்ட வல்லது.

ஆரோ ஸ்மித்.

பொதுமக்கள் நகைத்திறத்தை இன்னும் மறந்துவிட வில்லை; அவர்கள் இன்னும் நமக்கு அதன் மறைதிறவைக் கற்பிக்கக்கூடும்.

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில்.

ஆரோஸ்மித்.

திருவள்ளுவர்.

நம்மைப் பித்துக்கொள்ளிகளாகாமல் தடுத்து வரும் நல்லாற்றல் நகைப்புத்திறனே.

ஹென்ரி பெர்க்ஸன்.

உருக்கமான கோயில் மேடைச் சொற்பொழிவொன்றைக் கேட்ட அனைவரும் கண்ணீர் வடித்தனர். ஒருவன் மட்டும் அசையாதிருந்தான். இது பற்றி அங்குள்ளார் அவனை வினவிய போது அவன் “ஐயா, நான் இவ்வூரல்ல' என்று கூறினானாம். அவன் கண்ட கண்ணீருக்குரிய பண்பு நகைப்புக்கும் உண்டு. நகைப்பு எங்கும் இயற்கையாக எழுவதாக எவ்வளவு தோற்றினாலும், அது பரந்த ஓர் ஒப்புமைக் கூட்டுறவில், தோழமைத் தொடர்பு காரணமாக ஏற்படுவதேயாகும்.

உன்

ஹென்ரி பெர்க்ஸன்.

நகைப்பு கட்டாயமாக உனக்கு நலஞ் செய்வது. நகைத்த வுடன் குருதிகளிலெங்கும் ஒரு மின்னோட்டம் போன்ற ஓட்டம் ஏற்படுகிறது. ஆற்றலடக்கி வைத்துள்ள