பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம் - 41

எழுத்துக் களால் எழுதப் பெற்ற சுவடியைப் படிக்கிறான். அதற்கு விளக்கம் நாடுவதற்கான சொல்விளக்க நூலோ, எல்லையிலா ஊழிதான்.

கார்லைல்.

உடலுக்கு உடல்நலம் எப்படியோ அப்படியே மெய்யறிவு உளத்துக்கு.

ராஷ்ஃபூகால்டு.

நம் உண்மையான அறிவு நம்மை நாம் திருத்திக் கொள்ள உதவும்படி, நம் குற்றங் குறைபாடுகளை உணர்வதுதான், - திருந்தும் வகைதெரிவது அரிது; குற்றம் தெரிவதுகூடச் சிறப்பே.

அராபி நல்லுரைகள்.

கடவுள் பொன்னையும் அளித்துள்ளார், மெய்யறிவையும் அளித்துள்ளார். ஆனால் பொன்னைப்போலவே மெய்யறிவும் அளிக்கப் பெற்றுள்ளது. கடவுள் அளித்த பொன் களஞ்சியத்தி லில்லை, சுரங்கங்களினுள் கிடக்கின்றது.

அராபி நல்லுரைகள்.

இவ்வுலகு பற்றிய அறிவு மனிதருக்கு எங்குமிகுதியோ, அங்கு அவ்வுலக அறிவு குறைவு என்பதை நன்கு காணலாம்.

"பொருளிலார்க்கு இவ்வுலக மில்லை; அருளிலார்க்

கவ்வுலக மில்லாகி யாங்கு”.

கிப்ஸன்.

திருவள்ளுவர்.

அறிஞர் மனிதனை உணர்வது, குதிரைக்காரர் குதிரை காண்பது போன்றதே - செல்வம், மதிப்பு, பதவி ஆகியவை குதிரையின் சேணம், கடிவாளம் முதலியவையே.

ஸிஸீல்.

ஒரு தலைமுறையின் அறிவு மறு தலைமுறையின் மட மை.

பர்ஸ்ட்லி.

அறிவின் ஒழுங்குகளை அறிந்தும் அவற்றை வாழ்க்கையில் வழங்காதவன், நன்கு உழுதும் விதையாதவன் போன்றவனே.

ஸாதி.