பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

||-

அப்பாத்துரையம் - 41

அன்பு செய்யும்வரை மனிதன் ஒழுக்கக் கேடுடையவனாக

முடியாது.

சார்ல்ஸ் லாம்.

இவ்வுலகில் நாம் பெறும் பேரினத்தின் மணிமுடி ஒருவர்க் கொருவர் அன்பு காட்டுதலே.

மீன்ட்டல்.

கடவுள் மனிதனுக்கு மட்டும் கொடுத்துள்ள ஒரே அரும் பொருள் அன்பு. அது நெஞ்சுடன் நெஞ்சை, உள்ளத் துடன் உள்ளத்தை, உயிருடன் உயிரைப் பிணைக்கும் ஒரு வெள்ளித்தளை.

சர் வால்ட்டர் ஸ்காட்.

அன்பு என்றும் முன்பின் ஆய்ந்து தயங்குவதில்லை அது வரையறையின்றிக் கொடுக்கிறது; கருத்தற்ற ஊதாரி ளைஞன் போலக் கொடுக்கிறது. கொடுத்தபின அது துடிக்கிறது மிகுதி செய்யத் தவறிவிட்டோமோ என்று துடிக்கிறது.

-

அன்பிற்கு முண்டே அடைக்கும்தாழ்; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.

லூனா மோர்.

திருவள்ளுவர்.

அன்பு உலகைக் காண்பது கண்கொண்டல்ல, உளங்

கொண்டு.

ஷேக்ஸ்பியர்.

விரும்பி அன்பு செய்தல் நன்று; விரும்பாது அது செய்தல் அதனினும் நனிநன்று.

ஷேக்ஸ்பியர்.

வாழ்வின் மிகச் சிறந்த இன்பம் நாம் நேசிக்கப்படுகிறோம் என்பது - நம் பண்புகளுக்காக நேசிக்கப் படுகிறோம் என்பதை விட, பண்புகள் இல்லாதவிடத்தும் நேசிக்கப்படுகிறோம் என்பதே.

விக்டர் ஹியூகோ.