பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

55

ஒரு சாராருக்காக மற்றொரு சாராராகவே ஆண், பெண் இருபாலாரும் அமைந்துள்ளனர். அறிவமைதியுடனும், அன்பமைதியுடனும் இரு திறத்தினரும் ஒத்து வாழ்வதன் மூலமே வாழ்க்கை நலமும் வாழ்க்கைக் கடமைகளும் நிறைவெய்தி, வாழ்க்கைப் பயனாகிய இன்பம் கிட்டும்.

டப்ள்யூ. ஹால்.

இருபாலாருள் ஒரு பாலாரை அவமதிக்கும் அல்லது புறக்கணிக்கும் எவரும், மனிதப் பண்பிற் குறைபட்டவராகவே இருக்க முடியும். "இணைத்தது இறைவன்; மனிதன் பிரிக்கா திருப்பானாக," (விலிலிய நூல்)

ணை

ஸி. ஸிம்மன்ஸ்.

இருபாலாருள் எப்பாலரிடையே என்ன சீர்திருத்தம் நிகழினும், அதனை மறுபாலரிடம் காணாதிருக்க முடியாது. ஏனெனில், ஆண்பாலார் திறங்களைப் பெண்பாலாரும், பெண்பாலார் திறங்களை ஆண்பாலாரும் நிழற்படுத்திக் காட்டும் நிலைக் கண்ணாடிகள் போன்றவரே யாவர். ஒரு திறத்தவர் செப்பம் மறு திறத்தவர் செப்பத்தின் அளவுக்கொத்தாகவே இருக்கும்.

கால்ட்டன்.

சிந்தனைக்கு அவன்; வீரத்துக்கு அவன். மெல்லியல்புக்கு அவள்; இனிமைக்கும், நயத்துக்கும் அவள். கடவுளுக்காக அவன்; அவனிடமமைந்த கடவுள் தன்மைக்காக அவள்.

மில்ட்டன்.

கால மாறுபாடுகளிடையே மாறுபடாப் பொருள் ஒன்று உண்டு. அதுவே பெண்மை நலம் உடைய பெண்.

ஜாபினா ராஃஸ்டன்.

மனிதர் நிலவுலகு போன்றவர்; நாம் (மாதர்) திங்களுலகு போன்றவர். (திங்களைப்போல்) நம் ஒரு புறத்தையே நாம் அவர்களுக்குக் காட்டுகிறோம். ஆகவே, மறுபுறம் ஒன்று உண்டு என்பதை அவர்கள் அறிவதில்லை.

ஆலிவ் ஷரைனர்.