பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

அப்பாத்துரையம் - 41

பெண்ணாயிருந்து செயலாற்றும் செயல் மிகத் தொல்லை தருவதுதான்! அவர்கள் கையாளவேண்டியதாயிருக்கும் பொருள் மனிதனாயிற்றே!

ஜோஸஃவ் கான்ராட்.

வனப்பும் பயிர்ப்பும் வாய்ந்த மாது! கடவுளின் படைப்புக் கலைத்திறத்துக்கு ஒரு முழுநிறை வெற்றிச் சின்னம்; பான்னுலகக் கற்பனைக்கு ஒரு புகழ்ச்சான்று; உலகின் அருள்விளையாட்டுப் புதுமைக்கு ஒரு எடுத்துக் காட்டு; உலகின் புதுமைப்புதிர்களுள் ஒன்று!

ஹெர்மீஸ்.

கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டிய கடப்பாட்டுக்கு அடுத்த கடப்பாடு பெண்மைக்கு நாம் செலுத்த வேண்டிய கடப்பாடே மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும், அதை மணம்பெறச் செய்பவர்களும் அவர்களே.

-

போளி,

சட்டங்களைவிடப் பெண்டிர் கண்கள் சக்தி வாய்ந் தவை; தண்டனையைவிட அவர்கள் கண்பனிப்பு திருத்தும் ஆற்றலுடையது; நம் வாதங்களைவிட அவர்கள் பார்வை தெளிவு

தருபவை.

ஸெவில்

அழகு பெண்களைத் தற்பெருமைகொள்ளச்செய்கிறது. பண்புநலம் அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்கள் பயிர்ப்பு அவர்களைத் தெய்வங் களாக்குகிறது.

ஷேக்ஸ்பியர்.

பெண்மையே! நீ பொது வாழ்வின் இன்பப் போதினிலே கொடிபோல் நுடங்கித் தள்ளாடும் மென்மையுடையாய்! மாலை நிழல்போல் மாறுகின்றாய்! ஆனால், பொறுக்க வாண்ணாத் த் துயரத்தின் பளுவில் எங்கள் புருவங்கள் தெறிக்கின்ற காலையில், உன்போன்று உறுதியும், ஆறுதலும் தருபவர் யார்?

வால்ட்டர்ஸ்காட்.