பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

57

துயருறுபவன் தன் துயரால் பெறும் நோவினும் மிகுதியாக, அவன் துயர்கண்டு துயருறும் ஆள் ஒருவர் உண்டு; மகிழ்ச்சியிடையே மகிழ்பவன் மகிழ்ச்சியினும் மிகுதியாக, மகிழ்ச்சி பெறுபவர் ஒருவர் உண்டு... அன்பு, கனிவு, உளமார்ந்த பற்று ஆகியவற்றில் தன் தனித்தன்மையிழந்த அவ்வொருவர் பெண்.

வாஷிங்டன் இர்விங்.

பற்றுறுதியும் பண்புநிறைவும் உடைய பெண் எல்லா வகைகளிலும் ஒரு பண்பை நல்யாழ் போன்றவளே - ஆண்டு செல்லுந் தோறும் அதன் இசையிழைவு இனிமையும் நுண்மையும் மிகு மன்றிக் குறைபடாது.

ஓ. டப்ள்யூ. ஹாம்ஸ்.

புதுமலர்ச்சி யறிஞரைக் கண்டுணரும் கண்கள் பெண்டிர் கண்களே; புத்தறிவுக்குச் செவி சாய்ப்பவரும் பெண்டிரே. ஆனால், அதே பெண்டிர் வெற்றுரைச் சோம்பேறிகளிடையே வெற்றுரை யாடிக் கொண்டே, அவற்றிடையே பயனுரைகூறும் நன்மாந் தரையும் பிரித்துணர்வார்.

ஸி.எச்.டால்.

வனப்புடைய பெண் ஒரு மணி. நற்பண்பு வாய்ந்த பெண் ஒரு மணிக்குவை.

ஸாதி.

பெண்ணின் பெருமை புறஉலகறியாத தன்மையினது. அவள் அவாவும் புகழ், அவள் கணவன் மதிப்புக்குள் அடங்கிவிடுகிறது. அவள் இன்பமே அவள் குடும்பத்தின் நல்வாழ்வுக்குள் அடங்கிக் கிடக்கிறது.

ரூஸோ.

தெய்வங்களுக்கும் பெண்களுக்கும் உரிய பொதுப் பண்பு; இது துன்புறுவோர் பக்கமே அவர்கள் ஒத்துணர்வு செல்லும்.

பால்ஸக்.

வானின் கவிதைமலர்கள் வான்மீன்கள்; நிலவுலகின் கவிதை மலர்கள் பெண்மணிகள். ஒத்தியல் இசையுடன் ஒளிதந்து (வான்