பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

அப்பாத்துரையம் - 41

மீன்கள் வான வெளியிலியங்கும் நிலவுலகை இயக்குவது போலவே) மாதர் நிலவுகில் மனித வாழ்வை உருவாக்கி இயக்குகின்றனர்.

ஹார்கிரேவ்.

மறைநூலை ஓதிப் பிறருக்கு உரைக்கும் வேலை பெண் டிருக்குக் கூடாதென்று தடை செய்யப்பட்டிருப்பது ஏன் தெரியுமா? அவர்கள் வாதமின்றி உலகை அதன் வயப்படுத்தி, வருந்தாது எவரையும் திருத்தி விடுவரே!

நியூட்டன். தென்றலின் ஒவ்வோரசைவிலும் நுடங்கி, புயலில் மடியாத நாணல் போன்றவள் பெண்.

வாட்லி.

பெண்டிரே நம்மை இயக்குகின்றனர்; எனவே, அவர் களையே முழு நிறைபண்புடையவராக்குக. அவர்கள் திருந்துந் தோறும், நாம் தாமாகவே திருந்துவோம். பெண்மனம் அறிவு பெறுவதைப் பொறுத்ததே மனிதன் அறிவுவளர்ச்சி.

ஷெரிடன்.

பெண்ணின் கைப்பாவை பெண்.

கைப்பாவை மனிதன்;

சைத்தானின்

விக்டர் ஹியூகோ.

மிகச் சிறந்த பெண்ணிடம் ஆடவர் வீரத்தின் கூறு உண்டு. மிகச் சிறந்த ஆணிடம் பெண்டிர் கலைநயத்தின் கூறு உண்டு.

செல்வி மலாக்.

இன்பவாழ்வு நிறைவுற்ற நாடு, இன்பவாழ்வு நிறைவுடைய

பெண் - இருவர்பற்றியும் வரலாறு வாயாடாது.

ஜார்ஜ் எலியட்.

நற்குண நங்கையின் நெஞ்சை மட்டும் மனிதன் திறந்து பார்க்க முடியுமானால், அதில் எத்தனை அன்புக் கனிவுகளின் செறிவை, எத்தனை தன் மறுப்புக்களின் புதைந்த பொதிவுகளை, எத்தனை மாறாட்டத்துக் குள்ளான தூய நற்பண்புகளை காண முடியும்!

ரிஷிட்டெர்.