பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

அப்பாத்துரையம் - 41

நண்பரை நாடி அவர்கள் தகுதியைத் தேர்ந்துணர்ந்த பின் அவர்களை எஃகுத் தளைகளால் உன் நெஞ்சத்துடன் பிணைக்க.

ஷேக்ஸ்பியர்.

விழிப்புணர்வில்லா நண்பனினும், இடர் தருபவன் இல்லை. அவனைவிட விழிப்புணர்வுடைய பகைவன் மேலாம்.

லாஃவந்தேன்.

நட்பின் ஒளி எரியத்தின் (Phosphorus) ஒளி போன்றது. சுற்றிலும் இருள் செறியச் செறிய, அதன் ஒளி பிறங்குதல் மிகுதி. கிராம்வெல்.

போலி நண்பர் நிழல் போன்றவர். ஒளியிடையே அவர் தாளொடுதாளாக இருப்பர். இருளடையின் காணப்பெற

மாட்டார்.

போவீ.

குண ஒருமையால் நட்பு ஏற்படுவதினும், குறைபாடொற்று மையால் ஏற்படுதல் மிகுதி.

போவீ.

காய்ச்சும் கடுஞ் சூட்டில் இரும்பு இணைவது போலவே, பெருந்துன்பத்திடையே நட்பின் பிணைப்பு வலிவுறுகிறது.

கால்ட்டன்.

மருத்துவன் திறமையும் கூர்நோக்கும்; செவிலியரின் சுறுசுறுப்பும், விழிப்பும்; தாயின் பொறுமையும் கனிவும் யாவும் நட்பினும் உண்டு.

கிளாரெண்டன்.

நட்பாடுவதில் காலம் தாழ்த்து; நட்பாடியபின் என்றும் உறுதியாக அதனைப்பற்று.

ஸாக்ரட்டீஸ்.

நண்பனை இழத்தல் ஓர் உறுப்பை இழப்பது போன்றது. அதன் வெந்துயர் ஆறும். ஆனால், இழப்பைச் சரி செய்தல் முடிவதன்று.

ஸதே.