பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

இன்னாமை யுள்ளும் இனிதாம் பயனுண்டு;

பன்னூறு தேரை நச்ச ருவருப் புளதெனினும்

மன்னும் அதன்தலையில் துன்னரிய மாமணியே.

அப்பாத்துரையம் - 41

ஷேக்ஸ்பியர்.

துன்பத்தை ஒத்த பயிற்சிக் கருவி வேறில்லை.

டிஸ்ரேலி.

42. மகிழ்ச்சியும் இன்பமும்

கடமைகளை விளையாட்டாகவும், விளையாட்டுக்களை இடைப்பொழுதுபோக்குகளாகவும் கொள்ளும் மனிதனே இன்ப

முடையவனாவான்.

மிகு. தூயதிரு. டப்ள்யூ. ஆர். இங்க்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

திருவள்ளுவர்.

அறிவிலார் எதையெதை எண்ணி வாழ்கின்றனரோ, அவற்றையெல்லாம் விலையாகத் தந்து, நேசித்தல், நேசிக்கப் பெறுதல் ஆகிய இரண்டினையும் பெற விழைவர் அறிவுடையோர்.

டப்ள்யூ. எஸ். லாண்டார்.

மனிதன் இன்பத்தைத் தானே ஆக்கவல்லவன்.

தோரோ.

அவாக்களை நிறைவுபடுத்துவதை விடுத்து அவற்றைக் குறைப்பதன் மூலமே இன்பத்தை நாட முடியும் என்று நான் கண்டு கொண்டேன்.

ஜான் ஸ்டூவர்ட் மில்.

எண்ணுமளவு இன்பத்தை நாம் என்றும் பொறுவதில்லை. ஆனால் நாம் எண்ணுமளவு துன்பமும் நமக்கு எப்போதும் வருவதில்லை.

லாருஷ்ஃவொகோல்ட்.