பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

69

மனிதன் இன்பம் அவன் வாழ்நாளை நீட்டிக்கும் தன்மையது.

எக்ளிஸியாஸ்டிகஸ்.

மனித இன்பங்கள் அனைத்தம் விரைந்து ஓடுவன;

இறைவன் அமைப்பு அது;

ஏனெனில் எளிதில் கிடைக்கும் எப்பொருளும்,

கிடைத்தவுடன் இல்லையாகி விடுகிறது.

யூஜீன் ஃவீல்டு.

அழகு வாய்ந்த பொருள், என்றும் இன்பம் நல்கும்

பொருள்.

கவிஞர் கீட்ஸ்.

இனிமை, இனிமையுடன் போரிடுவதில்லை - மகிழ்ச்சியில், மகிழ்ச்சி மகிழவே செய்யும்.

ஷேக்ஸ்பியர்.

மறைவாக ஒரு நல்ல செயலைச் செய்து, அதைத் தற்செயலாக யாராவது வெளிப்படுத்தக் கிடைத்தால் அது போலும் இன்பமிகுதி தரும் செயல் வேறு இருக்க முடியாது.

சார்லஸ் லாம்.

ன்பமென்பது வேறு எதுவுமன்று; துன்பத்தின் இடை

ஓய்வு மட்டுமே.

ஜான் ஸெல்டன்.

ன்பம் என்பது சுட்ட நிலக்கரி போன்றது; அது ஒரு

செய்பொருளின் கிளை விளைவேயாகும்.

43. காலம்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

எமர்ஸன்.

திருவள்ளுவர்.