பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

81

சமயம் கொடுமையும், சில சமயம் கசப்பும் கொள்ளத்

தொடங்கிவிடுகிறது.

தமக்குரியரிடம் உரிமை பாராட்டும் சமயம் உரிமை காட்டினால் போதும் சற்றுத் தொலையுறவுடையவரிடமும், உறவற்ற நண்பர், சமூகப் பண்புடை யாரிடமும் அன்பும் ஆதரவும் வெளிப்படையாகக் காட்டுவதற்குரியன.

காதலரும் நெருங்கிய உறவினரும் வாய்மொழியில்லாமலே குறிப்பறிபவர். தொலைவினுள்ளவர்களிடம் மன உணர்ச்சி களைச் சமயத்துக்கேற்பச் சிறிது பெருக்கி முகமனுரைகள் கூறுவதும், கடிதம் எழுதுகையில் சிறிது விளக்கிப் புனைந்து எழுதுவதும் அவசியம். தம் மனைவியரல்லாத மாதரிடமும், தம் கணவரல்லாத ஆடவரிடமும் ஒருவர் பேசமுடியாதுபோனால், பண்புடையராகக் அப்பேச்சுகள் காதலுரிமையிற் பெரிது குறைந்தும் அவ்வவர் தகுதிக்கேற்ப நட்புரிமையில் பலதிறப்பட்டும் இருத்தல் வேண்டும்.

கருதப்படமாட்டார்.

கூடியமட்டும் தீய ஐயங்கள், தயக்கங்கள் கொள்ளாமலும் கொள்ளா விடாமலும் பார்த்துக் கொள்ளல்வேண்டும். இவற்றையே நாம் சமூகப் பண்பு என்கிறோம். இவையில்லா தாரிடம் அஃதாவது பண்பில்லாதவரிடம் பேச்சும் தேவையில்லை, ஒளிப்பும் தேவையில்லை. அவர்கள் தொடர்பை விரும்பவதாகவும் காட்டிக்கொள்ள வேண்டியதில்லை வெறுப்பாக மிகுதி காட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், விலகி ஒதுங்கிச் செல்லுதலும் அவராக அணுகினாலும் இடங்கொடாமல் செல்லுதலுமே நலம்.

ம்

பண்பிலாரிடம் நடக்க வேண்டிய இம் முறையைச் செல்வர், தம்மினும் செல்வம், பதவி ஆகியவற்றில் குறைந்தவரிடமும், வெளித்தோற்றத்தில் குறைப்பட்டவரிடமும் காட்டுவதுண்டு. சமூகத்தில் இஃது ஓரளவு தேவைப்படலாம். ஆனால், சமூகம் கடந்தது மனிதப்பேரினம். அதனை மறக்காத அளவில் புறத்தோற்றத்திலும், செல்வ நிலையிலும் வேறுபட்டாரிடத்தில் ஒப்புரவு, கண்ணோட்டமும் காட்டவேண்டும். பெண்டிர் வலிமையற்றோர், குழந்தைகள், துன்பமுற்றோர் ஆகியவர்களுக்கு உதவவேண்டின், சமூக எல்லை, புறத் தோற்றங்கள் ஆகியவற்றைக் கலைக. இதுவே பண்பிற் சிறந்தார் நிலை.