நல்வாழ்வுக் கட்டுரைகள்
99
தாயகமாகாமல், ஃபிரான்ஸே தாயகமாயிற்று. ஆனால் ஃபிரான்ஸிலும் அது பொருளாதாரத் துறையில் வெற்றி பெறவில்லை. ஜெர்மனியிலும் வெற்றி பெறவில்லை; இவ் வெல்லா நாடுகளின் அறிஞர் உரைகளையும் பயன்படுத்தி,ரஷ்ய அறிஞரே தம் நாட்டில் முழு அளவு செயலில் வெற்றி கண்டார். இதற்குக் காரணம் வெள்ளிடைமலை. பிரிட்டனும் ஃபிரான்சும் குடியேற்ற நாடுகளையும், ஆட்சி நாடுகளையும் உடைய ஆதிக்க வல்லரசுகள். எனவே மக்கள் சமத்துவ எண்ணம் அவர்களிடம் செயல் துறையாக வளரவில்லை. ஜெர்மனியும் ஆதிக்கப் பாதையை நாடிற்று. இத்தகைய ஆதிக்கப் பாதையை நாடாத ரஷ்யாவும், சீனாவும் ஓரளவு வெற்றியடைந்தது இயல்பே.
பிள்ளைகள் ஆதிக்க மனப்பான்மை அவர்களைக் கொடுங்கோலராக்கும். அவர்கள் அடிமை மனப்பான்மை இதனினும் கேடானது. அது தம்மினும் கீழ்ப்பட்டவர்களிடம் கொடுங்கோன்மையும், தம்மினும் மேம்பட்டவரிடம் நயவஞ்சகப் பசப்பும், ஒப்பானவரிடம் பொறாமையும் புழுக்கமும் நம்பிக்கைக் கேடும் உண்டுபண்ணும். இவை போலவே உயிர்களைக் கொடுமைப்படுத்தும் பழக்கமும், நாளடைவில் அவர்கள் உள்ளத்தில் கொடுமைத் தன்மையையும், இரக்கமற்ற தன்மையையும் வலுப்படுத்தி மனிதரிடமும் நண்பரிடமும் அவ்வாறு நடக்கும் குணத்தை வளர்க்கும். கொடுமைக்கு நேரேதிரான தீய பண்பு அச்சம். இதுவும் அடிமைத்தனம் போன்று தன் எதிர்ப் பண்பினும் தீங்கு விளைவிப்பதாகும். உலகில் கள், குடி, காமம், பொருளாசை ஆகியவற்றால் பல பழிகள் நேருகிறதானாலும், அவையனைத்தும் சேர்ந்தால்கூட அச்சத்தினால் வரும் கேடுகளில் ஒரு சிறு பங்குக்கு ஒப்பாகமாட்டாது. விடுதலை யிழந்து நெடுநாள் அடிமைப்பட்டு வாழ்பவர்கட்குக் கூட, எளிதில் அடிமைப் பண்பு உள்ளத்தில் எழுவதில்லை. ஏனெனில், அடிமைப் பண்பின் தாய் அச்சமே யாகும். அச்சம் என்ற ஒன்றுமட்டும் உலகில் இல்லை என்றால் மற்ற எல்லாப் பழிகளும் கடுகளவாகக் குறுகிவிடும். பொய், கொலை, களவு, காமம் முதலிய எந்தத் தீமை செய்தவனும், அவற்றுக்காகக் கழிவிரக்கங் கொண்டு திருந்தக்கூடும். தண்டனையச்சம் தண்டனையினும் கொடியது. அது தண்டமையால் வரும் திருத்தப்பாட்டினைக் கெடுத்து, அதைத்