138
அப்பாத்துரையம் - 43
பொறியின் ஆற்றல் கடந்தும், உடலாற்றல் கடந்தும் நுகரும் பாறியின்பமும் உடலின்பமும் வாழ்வைத் தேய்த்துக் குறுக்குபவை. துன்பநெறிகளை அகலத் துறந்து போலிக் கலையின்பக் கோட்டைக்குள் சிறைப்படுபவரும் இதே வகை இன்ப நுகர்வால் தளர்ச்சியுறுகின்றனர். மூன்றாவது வகையினர் துன்பந்தரும் வறுமையைப் போக்கச் செல்வத்தையோ, புகழையோ நாடுகின்றனர். வேறு சிலர் துன்ப நீக்கத்தையும் இன்பத்தையும் நாடிச் சமய வினை முறைகளில் கருத்துச் செலுத்துகின்றனர். முந்திய இரு வகையினர் பெறும் தற்காலிக இன்பம்கூட இவர்கள் பெறுவதில்லை. ஆறுதல் மட்டுமே பெறுகின்றனர். இந்த ஆறுதலும் நிலையானதாய் அமைவ தில்லை.
தீன மையை மறப்பது அல்லது மறைத்து வாழ்வது இன்பமாகாது. மேற்கூறிய மூவகை இன்பநாட்டத்தவரும் தற்காலிக இன்பம் அல்லது ஆறுதலே பெறுகின்றனர். இது துன்பத்தை மறக்கஅல்லது மறைக்க மட்டுமே உதவுகிறது. அதை ஒழிக்கும் வகைமுறைகளாக அவை விளங்க மாட்டா.
இதுமட்டுமன்று. இத்தற்காலிக இன்பம் அல்லது ஆறுதல்கள் விரைவில் முடிந்துவிடுகின்றன. உடனே பழைய பிணி, நோவு, நோக்காடுகள் வந்துவிடுகின்றன. சில சமயம் இவை புதிதாக, முன்னிலும் மிகையாக, வந்தமைகின்றன. அடிக்கடி இன்பந்தூண்டும் ஆவல் துன்பத்தின் அழைப்பாக முடிகிறது. தற்காலிகப் போலி இன்பத்தின் கோட்டைமதில் தகர்க்கப் படுகிறது.துன்பவெள்ளம் மனிதனை மீண்டும் ஆட்கொள்கிறது.
பெரும்பாலான இன்பங்களின் நிலையாமையை
எண்ணும்போது, ஒவ்வோர் இன்பத்தின் மீதும் ஒரு கூரிய வாள் தொங்கிக்கொண்டிருக்கிறது என்றே கூறத்தகும். இன்ப நாட்டத்தில் துன்பத்தை மறந்திருப்பவன் எதிர்பாராதபடி எந்தக் கணத்திலும் துன்பமாகிய வாள், அறிவால் அரண் செய்யப்படாத அவன் இன்பத்தின் மீது, அறுந்து விழக்கூடும்.
வாழ்க்கையில் ஏற்படும் அவர்களின் முரண்பாடு மிகவும் வியப்பிற்குரியது. குழந்தை மனிதனாகவேண்டுமென்று, ஆடவர் அல்லது பெண்டிர் ஆகிவிடவேண்டுமென்றுதான் அவாவி