பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(142) ||. ||--

அப்பாத்துரையம் - 43

நன்மையாயிராது. தீமைக்கு எதிர்ப்பண்பான தற்காலிக நன்மையாகவும் இராது. அது தீமையற்ற நன்மை, எல்லையற்ற எதிர்கால வளர்ச்சிக்குரிய, திட்டமிட்ட,நிலையான நன்மையின் ஒரு தொடக்கக் கூறு ஆய்விடும்.

அறிவறியும் முயற்சி இல்லாததாலேயே, அதாவது தீமையைப்பற்றிய அறிவு இல்லாததாலேயே, உலகில் தீமைகள் வளர்கின்றன என்பதில் ஐயமில்லை. ஒரு குழந்தையைச் செவிலியர் படுக்கைக்குக் கொண்டுபோக முயலும் போது, நாள்தோறும் அது விளக்கொளியைப் பிடிக்க முயற்சி செய்து வந்தது. தாய் அதைக் தடுத்து நாள் தோறும் குழந்தையைப் பேணினாள். ஆனால் என்றும் தாய் கவனித்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு நாள் தாய் கவனிப்பில் சிறிது தவறுதல் ஏற்பட்டபோது, பிள்ளை விளக்கை பிடித்தே விட்டது. அதன்பயன்? அதன்பின் அதுவகையில் தாயின் கவனிப்புத் தேவைப்படவேயில்லை. தாய் கையைப் பிடித்திழுத்தாலும் குழந்தை விளக்கின் பக்கம் நாடாது. சிற்றறிவுடைய பெற்ற அன்னையின் படிப்பினையைவிட, பேரறிவுடைய இயற்கை யன்னையின் படிப்பினை பிள்ளைக்கு நிலையான அறிவு தருகின்றது.

பிள்ளை துன்பம் அனுபவித்ததற்குக் காரணம் தீயன்று. தீயின் இயல்பை அது அறியாததே. ஒருதடவை சுட்டுக் கொண்டபின் இவ்வறியாமை நிலையாக அகன்றது. இவ் வறிவு பெறுமுன் தீமை அழகிய இன்பந்தரும் பொருள் என்று எண்ணித்தான் குழந்தை அதைப் பிடிக்க அவாவிற்று. தீமையின் அறிவின்றி மனிதர் அவாவும் வெற்றின்பங்கள் இத்தகையவைகளே. குழந்தை சுடுதல் என்ற விளைவிலிருந்து. மையின் காரணத்தை எவ்வளவு எளிதாக உணர்ந்து கொண்டதோ, அவ்வளவு எளிதாக அறிவிலா மனிதர் அதை உணர்வதில்லை. ஏனெனில் அறிவைப் போலவே அறியாமை யும் குழந்தையிட மிருப்பதைவிட மனிதனிடம் வேரூன்றி விடுகிறது.

எங்கும் எப்போதும் இருளே தீமையின் சின்னமாகக் கொள்ளப்படுகிறது. நேர்மாறாக ஒளியே நன்மையின் சின்னமாகவும் உள்ளார்ந்த, நிலையான நிறைமெய்ம்மை அல்லது