பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(164) ||__

அப்பாத்துரையம் - 43

உன்னை மட்டுமே திருத்த முடியும். பிறர் பகைமையை நீ அடைய முடியும். உன் பகைமையை நீ பெற முடியாது. தற் குறை காணும் பழக்கத்தாலும் தன் திருத்தத்தாலும் நீ எல்லையற்ற இயற்கையின் அடித்தளத்தின்மீது உன் வாழ்வின் அடித்தளம் பதிப்பாய். அடித்தளம் உறுதியாயிருந்தால், கட்டடம் உறுதியில் பிற்பட்டு விடாது.

புறவறுமையையும் புறத்தேயுள்ள தீய சூழலையும் அறவே அகற்ற வேறுவழி கிடையாது. அவற்றுக்கு வழி வகுத்த, வகுத்து வளர்க்கிற, குறுகிய தன்னலம், தன்னடக்கமின்மை, போட்டி, பொறாமை, பகைமை முதலிய அழிவுப் பண்புகளை அகற்றுவது ஒன்றே அதற்கு வழி. உண்மைச் செல்வத்துக்கு வழி அகச் செல்வத்தைப் பெறுவதே. ஏனெனில் செல்வம் இருப்பவனுக்குக் கூடஇவ் வழியிலன்றி அச்செல்வம் கிடைப்பதில்லை. செல்வத்தை நாடுபவன் அதன் மெய்ப்பயன் நோக்கி அதன்மீதுள்ள தன்னலப் பற்றை விட வேண்டும். இந்த ஒரு செய்தியில் மட்டுமாவது கொண்டவன் பட்டான், பட்டவன் கொண்டான் என்ற மூதுரை நிறையுரை ஆகும். தன்னலப்பற்று தன்னலத்தைக் கூட நிறைவு படுத்தாது. தன்னலமற்ற பொதுநலப்பற்று பொது நலம் வளர்ப்பதுடன், தன்னலத்தையும் நிறைவு படுத்தும். அதுவே செல்வத்தின் முழுநிறை பயன் அளிக்கும். அதுவே அதன் நிலையான மெய்ப்பயனும் ஆகும். இந்த மெய்ப்பயன் பிறர்க்கு நலம் செய்வதுடன் நில்லாது. அதற்கு முன்னிலையாக அது செய்பவனையே நலப்படுத்திவிடும்.

பொதுநல நோக்கமில்லாதவன் செல்வம் பெறுவதரிது. பெற்றாலும் அது அவன் அகவறுமையை மிகுதிப்படுத்தி அவன் பழைய வறுமைநிலை கடந்து அதனினும் கொடிய பொல்லா வறுமைக்கு வழிவகுக்கும்.

ம்

நன்மையோ, தீமையோ, எதுவாயினும் ஆகுக உள்ளத்தின் கருத்துக்கள் எவற்றையும் மாற்றுவதை விடப் புதிய கருத்துக்கள் எவற்றையும் மாற்றுவதை விடப் புதிய கருத்துக்களைப் புகுத்தல் எளிது. புதிய கருத்துக்கள் வளருந் தோறும் பழைய கருத்துக்கள் மங்கிப் படிப்படியாக அடங்கும். வை சிறிதுகாலம் நீடித்தாலும் கேடில்லை. பழம் பண்பாய் நலிவுறுகிறது.இந்த நல் ஆக்க முறையை தவிர, அகப் பண்புகளில்