பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையார் எனும் அறிவாட்சி அடங்கியதே!

தப்பாய்த் தவறாய்த் தமக்காய்ப்

படிக்கும் தரகரிடை

உப்பாய் உணவாய் உடம்பாய்த்

தமிழை உயிர்த்திருந்து,

‘முப்பால் ஒளி'யாய் முகிழ்த்து

‘மணிவிளக்’ காய்எரிந்த

அப்பாத் துரையார் எனும்அறி

வாட்சி அடங்கியதே!

ஒப்பாய்த் தமிழ்கற்(று) உரைவிற்(று)

உயிர்வாழ உடல்களிடை

மப்பாய்த் திரண்டு மழையாய்ப்

பொழிந்து தமிழ்வளர்த்துக்

கொப்பாய்க் கிளையாய் மலராய்க்

கனியாய்க் குலம்புரந்த

அப்பாத் துரையார் எனும்தமிழ்

மூச்சிங் கொடுங்கியதே!

செப்போ இரும்போ மரமோ

மணலோ எதுதரினும்

எப்போ திருந்தமிழ் மாறி

உயிர்வாழ் இழிஞரிடை

முப்போ திலுந்தமிழ் ஆய்ந்தே களைத்த மொழிப்புலவர்