திருநிறை ஆற்றல்
185
தீமை கொழிக்கும் எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள். ஆனால் நன்மையைப் பெருக்கும் எண்ணங்கள் ஆக்க எண்ணங்கள். அவற்றின் கூரொளிக் கதிர்களின் முன் செய லற்ற தீய ஆற்றல்கள் யாவும் ய எழுஞாயிற்றின் ஒளிக் கரங்களைக் கண்டோடும் இருள்போல மாய்ந்தொழியும். அகத்தில் இருந்த இருளும் மாசும் கெட, அவ்வெண்ணங்கள் உள்ளத்தில் களிபரப்பி ஒளிவீசும். அத்தகைய உள்ளத்தில் தூய அன்பும் நல்லவாவும் நற்பற்றுக்களும் நடனமிடும்.
தளரா உறுதியுடைய, நிமிர்ந்த, தூய்மையும் பற்றுறுதியு முடைய இடத்தில் உடல் உள நலங்களும் ஆற்றலும் வெற்றியும் மிளிரும். நோய், தோல்வி, இடர் ஆகியவை இவற்றை உடையவனை அணுகமாட்டா. ஏனெனில் அவை பற்றிவாழ்வதற்குரிய மாசு, இருள் ஆகிய பற்றுக் கோடுகள் எதுவும் அவனிடம் இருக்க மாட்டா.
உடலின் நிலைகள் பெரும்பாலும் உளநிலை சார்ந்தவையே. அறிவியல் உலகு இந்த உண்மையை விரைந்து கண்டுவருகிறது. மனிதன் உளநிலை அவன் உடல் நிலையையே பொறுத்தது என்ற பழைய இயற்பொருள்வாத நம்பிக்கை விரைந்து மாய்ந்து வருகிறது. மனிதன் உடற்பண்புகளுக்கு அப்பாற்பட்டவன் என்னும் உயர் ஆன்மிகக் கருத்து வளர்ந்து வருகிறது. கருத்தின் ஆற்றலாலேயே உடலின் இயல்பு வரையறுக்கப்படுகிறது. செரிமான மில்லாமையினால் மனிதன் மனக்கலக்கமடைகிறான் என்ற கருத்தினிடமாக, மனக்கலக்க மடைவதனாலேயே செரிமானமில்லாமை ஏற்படுகிறது என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. அணிமை வருங்காலத்தில் நோய்கள் யாவுமே உளப்பண்பு காரணமாக ஏற்படுபவைதான் என்பது உறுதிப் படக்கூடும் என்னலாம். இயற்கையிலுள்ள எந்தத் தீங்குகளும் உளப்பண்பு சாராததென்று கூறமுடியாது. நோய், துயர், துன்பம் ஆகியவை உளம் சார்ந்ததேயன்றி இயற்கையின் அமைதி சார்ந்தவையல்ல. ஆகவே, தீமை பொருள்களின் இயல்பில் இல்லை. உளநிலையின் சார்பிலேயேதான் இருக்கிறது. அவை பொருளுலகில் அடிப்படைப் பண்புகளல்ல. அடிப் படை உயிரின் பண்புமல்ல. தற்காலிகமான உளநிலையின் பண்பே எண்ணங்களின் சாயற் படிவமே! இன்னும் தெளிவாகக்