பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநிறை ஆற்றல்

வாடா இன்ப உலகைநாடி வாட்டம் அடைகின்றாயா நீ? கோடா உவகைக் கோட்டை தேடிக் கோட்டம் உறுகின்றாயா நீ? ஆடா அமைதி அன்பின் உயிரில் அணைய விழைகின்றாயா நீ? ஓடா ஆவல் அற்ற உள்ளம் உகந்து கொள்க அமைதியே! நீடு துன்பம் நெஞ்சில் கொண்டு நெகிழ்ந்து நைகின்றாயா நீ? கூடுநெறியில் வளைந்துதிரிந்து குலைந்து மலைகின்றாயா நீ? நாடும் அமைதி தேடிப்புன்கண் நலிய விழைகின்றாயா நீ? வீடுபெறுதி, குறுந்தன்னலங்கள் வீழ்த்தி, அமைதிப் பொதுவிலே!

(209